உலகக் கோப்பை தொடருக்கு முன் ஐபிஎல் தொடர் இருந்திருந்தால் ஒருவேளை ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறலாம்; நக்கலாக பேசிய முன்னாள் வீரர் !! 1

ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ருத்ராஜ் கெய்க்வாட் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் முக்கிய வீரராக உருவெடுத்தார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன் ஐபிஎல் தொடர் இருந்திருந்தால் ஒருவேளை ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறலாம்; நக்கலாக பேசிய முன்னாள் வீரர் !! 2

குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த தொடரில் அதிகமான ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்த ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் இவர் இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

 

புனே மைதானத்தில் போட்டி வைத்தால் மட்டுமே சிறப்பாக செயல்படும் ருத்ராஜ் கெய்க்வாட் மற்ற மைதானத்தில் விளையாடுவதற்கு சிரமப்படுகிறார் என்று கூறும் அளவிற்கு இவருடைய ஆட்டம் மிக மோசமாக இருந்தது இதன் காரணமாகவே இவருக்கு இந்திய அணியில் ரெகுலராக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

உலகக் கோப்பை தொடருக்கு முன் ஐபிஎல் தொடர் இருந்திருந்தால் ஒருவேளை ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறலாம்; நக்கலாக பேசிய முன்னாள் வீரர் !! 3

தற்போது உலகக்கோப்பை தொடருக்கான தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இந்திய அணி ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு வாய்ப்பு கிடைக்குமா..? கிடைக்காதா..? என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.

 

அதற்கு தனது பாணியில் பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா நக்கலாக பதில் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன் ஐபிஎல் தொடர் இருந்திருந்தால் ஒருவேளை ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறலாம்; நக்கலாக பேசிய முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,“ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பை இவர் சரியாகவும் பயன்படுத்திக்கொள்ளவில்லை, உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது, ஏனென்றால் அதற்கு முன் ஐபிஎல் தொடர் கிடையாது, அப்படி ஒரு வேலை இருந்திருந்தால் இதற்கு முன் இந்திய அணி வருன் சக்கரவர்த்தி சர்துள் தாக்கூர் போன்ற வீரர்களை தேர்ந்தெடுத்து குழப்பியது போல் இந்த முறையும் செய்திருப்பார்கள், அவர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது என்னமோ உண்மைதான் ” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.