102மீட்டர் சிக்ஸர் அடித்த தோனியை அதற்கடுத்த பந்திலே விக்கெட் எடுத்தது குறித்து பேசிய நடராஜன் ! 1

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது.

102மீட்டர் சிக்ஸர் அடித்த தோனியை அதற்கடுத்த பந்திலே விக்கெட் எடுத்தது குறித்து பேசிய நடராஜன் ! 2

இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் 16 போட்டிகளில் விளையாடி தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத் தொடரில் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் நடராஜன் மூன்று பார்மட்களிலும் அறிமுகமாகினார். இந்த ஆஸ்திரேலியா தொடரில் மொத்தம் 11 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி வந்த இவர் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்த்த போது நடராஜன் சொந்த காரணத்தால் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

102மீட்டர் சிக்ஸர் அடித்த தோனியை அதற்கடுத்த பந்திலே விக்கெட் எடுத்தது குறித்து பேசிய நடராஜன் ! 3

தற்போது இந்த ஐபிஎல் சீசனுக்காக நடராஜன் தனது அணியுடன் இணைந்து தீவிராமாக பயிற்சி மோற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடராஜன் கடந்த சீசனில் தோனி, டிவில்லியர்ஸ் போன்ற முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில் “கடந்த சீசனில் நான் பல ஜாம்பவான்களின் விக்கெட்களை வீழ்த்தினேன். குறிப்பாக நான் தோனியின் விக்கெட் வீழ்த்தியதை பெருமையாக நினைக்கிறேன். அந்த போட்டியில் தோனி எனது பந்தில் 102மீட்டருக்கு சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த பந்திலே தோனியின் விக்கெட்டை வீழ்த்தினேன்.

102மீட்டர் சிக்ஸர் அடித்த தோனியை அதற்கடுத்த பந்திலே விக்கெட் எடுத்தது குறித்து பேசிய நடராஜன் ! 4

அப்போது நான் விக்கெட் வீழ்த்தியதற்காக மகிழ்ச்சி அடையவில்லை, என்னென்றால் தோனி அடித்த சிக்ஸர் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தேன். அதேபோல் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது பெருமையாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *