JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கிறது.

ஒரு நாள் தொடரில் நியூசிலாந்தின் சவாலை முறியடித்து தொடரை வசப்படுத்திய இந்திய அணி, அதே போன்று 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து ‘நம்பர் ஒன்’ அணி என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங் தேர்வு,!! அணி விவரங்கள் 2
CARDIFF, WALES – JUNE 09: New Zealand captain Kane Williamson leads his team off the field after the ICC Champions Trophy match between New Zealand and Bangladesh at SWALEC Stadium on June 9, 2017 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

முன்னாள் உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற முன்னணி அணிகளை எல்லாம் வீழ்த்தி இருக்கிறது. ஆனால் ஏனோ, நியூசிலாந்தை மட்டும் இதுவரை போட்டுத்தாக்க முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 இருபது ஓவர் போட்டிகளிலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு உலக கோப்பையில் தோற்றதும் இதில் அடங்கும்.

இந்த நீண்ட கால சோகத்துக்கு விராட் கோலி தலைமையிலான படையினர் முடிவுகட்டி வரலாறு படைக்கும் வேட்கையில் இருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா சதங்கள் அடித்து அசத்தினர். பந்து வீச்சில் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் பார்மில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, டோனி, தவான் ஆகியோரும் நல்ல நிலையில் இருப்பது இந்திய அணியை வலுப்படுத்துகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங் தேர்வு,!! அணி விவரங்கள் 3

இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவுக்கு இது கடைசி சர்வதேச போட்டி என்பதால், அனேகமாக புவனேஷ்வர்குமார் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் நீடித்த 38 வயதான நெஹரா சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பவும் இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் அவ்வளவு எளிதில் பணிந்து விடவில்லை. குறிப்பாக கடைசி ஒரு நாள் போட்டியில் 338 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வெற்றியை நெருங்கி வந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வி கண்டது. மிடில் வரிசையில் ராஸ் டெய்லர், டாம் லாதம், நிகோல்ஸ் ஆகியோரின் பேட்டிங், கேப்டன் வில்லியம்சனுக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங் தேர்வு,!! அணி விவரங்கள் 4

தங்களது பிடியை விட்டுக்கொடுக்காமல் 20 ஓவர் தொடரிலும் மிரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இது குறுகிய வடிவிலான போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த மைதானத்தில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரில் 4 ஆட்டங்கள் நடந்தன. அதே சமயம் இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும்.



  • SHARE
  • விவரம் காண

    16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்….! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ்

    சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய...

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்!

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய அணியின் முன்னாள்...

    அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ… கவலையில் குல்தீப் யாதவ்

    தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்...

    வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா!

    விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! விராட்கோலி சொன்ன சேலஞ்சை செய்து முடித்து, வீடியோ ஒன்றை...

    இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்!

    இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்த...