இது எல்லாம் அவுங்களுக்கு அசால்ட்டு... இறுதி போட்டியில் இந்த அணி தான் வெல்லும்; சேன் வார்னே உறுதி !! 1

நியூசிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை சேன் வார்னே வெளிப்படுத்தியுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.

இது எல்லாம் அவுங்களுக்கு அசால்ட்டு... இறுதி போட்டியில் இந்த அணி தான் வெல்லும்; சேன் வார்னே உறுதி !! 2

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இது எல்லாம் அவுங்களுக்கு அசால்ட்டு... இறுதி போட்டியில் இந்த அணி தான் வெல்லும்; சேன் வார்னே உறுதி !! 3

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேன் வார்னே, எந்த அணி கோப்பையை வெல்லும் எனபது குறித்தான தனது கணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வலுவானதாக உள்ளது. அவர்களால் டி.20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியும். என்னை பொறுத்தவரையில் ஆடும் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடம் கொடுப்பதே தேவையற்றது, எனது ஆடும் லெவனில் நிச்சயம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடம் கிடையாது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.