இதுக்கு தான் போன மேட்ச் இவ்ளோ பில்டப் குடுத்தீங்களாடா.. இலங்கையை பொட்டலம்கட்டி இன்னிங்ஸ் வெற்றி.. ஒயிட்-வாஷ் செய்து வீட்டுக்கு அனுப்பியது நியூசிலாந்து! 1

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டையும் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்துக்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை விளையாடியது. பரபரப்பாக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், கடைசி நாளின் கடைசி ஓவரில் இலங்கை அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆகையால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் ஒரே வாய்ப்பையும் இழந்தது.

சற்று மனஉளைச்சலுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் பந்து வீசியது. நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் 215 ரன்கள், ஹென்றி நிக்கோல்ஸ் 200* ரன்கள் அடித்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 580 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

இதுக்கு தான் போன மேட்ச் இவ்ளோ பில்டப் குடுத்தீங்களாடா.. இலங்கையை பொட்டலம்கட்டி இன்னிங்ஸ் வெற்றி.. ஒயிட்-வாஷ் செய்து வீட்டுக்கு அனுப்பியது நியூசிலாந்து! 2

இமாலய ஸ்கொரை துரத்திய இலங்கை அணிக்கு துவக்கமும் அமையவில்லை, முடிவும் சரியாக அமையவில்லை  கேப்டன் கருணரத்தினே 89 ரன்கள் அடித்ததை வேறு எவரும் சோபிக்கவில்லை. கருணரத்தினே ஆட்டமிழந்த பிறகு, இலங்கை அணி 164 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது.

416 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் ஃபாலோ ஆன் கொடுத்தது நியூசிலாந்து அணி. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் 113 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. குஷால் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் இருவரும் களத்தில் இருந்தனர்.

இதுக்கு தான் போன மேட்ச் இவ்ளோ பில்டப் குடுத்தீங்களாடா.. இலங்கையை பொட்டலம்கட்டி இன்னிங்ஸ் வெற்றி.. ஒயிட்-வாஷ் செய்து வீட்டுக்கு அனுப்பியது நியூசிலாந்து! 3

303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே குஷால் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் இருவரின் விக்கெட்டும் பறிபோயின. நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சந்திமால் மற்றும் தனஞ்செயா இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது.

துரதிஷ்டவசமாக, தவறான நேரத்தில் சந்திமால் ஆட்டம் இழந்தார். இவர் 62 ரன்கள் அடித்திருந்தார். அடுத்து வந்த நிசன் மதுஷகா சிறிது நேரம் தனஞ்செயா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதையும்  நியூசிலாந்து பவுலர்கள் நீடிக்க விடவில்லை. நிசன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை கொடுத்து வந்த தனஞ்செயாவும் 98 ரன்களுக்கு அவுட்டாக, இலங்கை அணிக்கு முன்னிலை பெற முடியும் என்ற நம்பிக்கை தவிடுபொடியானது. அடுத்து வந்த பவுலர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 58 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இலங்கை அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட்-வாஷ் செய்தனர்.

இதுக்கு தான் போன மேட்ச் இவ்ளோ பில்டப் குடுத்தீங்களாடா.. இலங்கையை பொட்டலம்கட்டி இன்னிங்ஸ் வெற்றி.. ஒயிட்-வாஷ் செய்து வீட்டுக்கு அனுப்பியது நியூசிலாந்து! 4

ஆட்டநாயகன் விருது என்று நிக்கோல்சுக்கும், தொடர் நாயகன் விருது கேன் வில்லியம்சனுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *