உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறோம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (சனிக்கிழமை) சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பைக்கு தயார் ஆவதே தங்களின் உடனடி கவனம் என்று தெரிவித்தார். மேலும், ஒரு குழுவாக தலைமை தாங்கி அணியை வழிநடத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டிருப்பதாகவும் கோலி கூறினார்.

அப்போது, பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா ஆகியோரின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கோலி, அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.

‘அணியில் மாற்றம் செய்தாலும் நமது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அறிவித்தபிறகு, யாரை அணியில் சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்’ என்றார் கோலி.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டோனி, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட ஒரு நாள் போட்டி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

களத்திலும், ஓய்வறையிலும் டோனி இருக்கும் போது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்து வருகிறோம். அவர் உடன் இருக்கும்போது, அணியில் உள்ள வீரர்களுக்கும் அமைதி வந்து விடும். அது மிகவும் முக்கியமானதாகும். இதே போல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வதால், யுக்திகளை வகுப்பதில் கேப்டனுக்கும் ஓரளவு உதவிகரமாக இருக்கிறார்.

டோனி பல ஆண்டுகள் அணியை வழிநடத்தியதுடன், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர். அதனால் அவர் அணியில் அங்கம் வகிக்கும் போது, எப்போதும் உதவியாக இருக்கிறார். சொல்லப்போனால் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடும் போது, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகவும் முக்கியம். இந்த வகையில் நிறைய ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்துள்ளார். ஆட்டத்தின் போக்கு குறித்து அவரது தெளிவான சிந்தனையும், அறிவுரைகளும் அணிக்கு மிகவும் தேவையாகும்.

மேலும் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் டோனி பக்கபலமாக இருக்கிறார். அதாவது விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன் எந்த மாதிரி ஆட முயற்சிக்கிறார் என்பதை முன்கூட்டியே கணித்து பவுலர்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கு ஏற்ப பந்து வீச வைக்கிறார்.



 • SHARE

  விவரம் காண

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை !!

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர்...

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...