இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம் !! 1

இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம்

ரஞ்சி டிராபியின் பரோடா அணியில் தான் விலகி கொள்ள அனுமதி வேண்டும் என்று பரோடா கிரிக்கெட் வாரியத்திற்கு இர்பான் பதான் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான், கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார்.

இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம் !! 2

இது தவிர உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மற்றும் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட தொடர்களிலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் இர்பான் பதானிற்கு சற்று ஆறுதலாக, உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் பரோடா அணியின் கேப்டனாக இர்பான் நியமிக்கப்பட்டார், ஆனால் இர்பான் பதானின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, இரண்டே போட்டியில் பதானிடம் இருந்து கேப்டன் பதவியை பரோடா நிர்வாகம் பறித்து கொண்டது.

இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம் !! 3
Out-of-favour all-rounder Irfan Pathan has sought a No Objection Certificate (NOC) from Baroda to play for another team after being snubbed and dropped by the team he had represented for the last 17 years.

இதனால் விரக்தியின் உச்சத்தில் உள்ள இர்பான் பதான், தான் பரோடா அணியில் இருந்து விலகிவிட்டு, வேறு அணிக்காக விளையாட விரும்புவதாகவும் அதற்கு அனுமதி கொடுக்கும் வகையில் தடை இல்லா சான்றிதழ் கேட்டு பரோடா கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பரோடா அணிக்காக ஏறத்தாழ 17 வருடங்களாக விளையாடி வரும் இர்பான் பதானின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் இது குறித்து பரோடா கிரிக்கெட் வாரியத்திற்கு பதான் எழுதியுள்ள கடிதத்தில்,  “நான் பரோடா அணியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புகிறேன். எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் வேறு எதாவது அணிக்காக விளையாட விரும்புகிறேன். அதன் அடிப்படையில் என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்று எனக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

பதானின் இந்த கடிதம் குறித்து இறுதி முடிவு எடுக்க பரோடா கிரிக்கெட் வாரிய நிர்வாக கூட்டம் இந்த வாரம் கூட உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் பதான் குறித்தான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம் !! 4

இது  குறித்து பேசிய பரோடா கிரிக்கெட் வாரிய செயலாளர் சினேகல் பாரிக் “ பரோடா அணியை வழிநடத்த இளம் வீரரை தேர்ந்தெடுக்க விரும்புகிறோம், அதன் காரணமாக இர்பான் பதான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் பரோடா அணி சமீப காலமாக சொதப்பி வருகிறது. இதனை சீர் செய்யும் முயற்சியில் தான் இர்பான் பதான் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஹூடாவை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என்று சினேகல் பாரிக் தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான் கேப்டனாக விளையாடிய கடைசி போட்டியில் பரோடா அணிக்காக 80 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.