அவர் எப்படிபட்ட வீரர் தெரியுமா ? இதெல்லாம் அவர் கிட்ட தான் கத்துக்கட்டேன் ! - ஆர்சிபி வீரர் படிக்கல் 1

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

அவர் எப்படிபட்ட வீரர் தெரியுமா ? இதெல்லாம் அவர் கிட்ட தான் கத்துக்கட்டேன் ! - ஆர்சிபி வீரர் படிக்கல் 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது.

மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆர்சிபி அணியின் துவக்க வீரர் தேவதத் படிக்கல் கொரோனா பாதிப்பு காரணமாக மும்பை இந்தியன்ஸ் உடனான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவித்துள்ளனர்.

அவர் எப்படிபட்ட வீரர் தெரியுமா ? இதெல்லாம் அவர் கிட்ட தான் கத்துக்கட்டேன் ! - ஆர்சிபி வீரர் படிக்கல் 3

தற்போது படிக்கல் விராட் கோலியை பாராட்டி பேசியிருக்கிறார். விராட் கோலி கிரிக்கெட் மீது மிகுந்த விருப்பம் மற்றும் ஆர்வத்துடன் இருக்கிறார். விராட் கோலியை ஊக்குவிக்க யாரும் தேவையில்லை. அவர் தனக்கு தானே அறிவுரை கூறிக்கொள்வார்.

அவர் தன் நாட்டிற்காக வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். விராட் கோலியின் இந்த தீவிரத்தை எனக்குள் நான் கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இந்தாண்டு ஐபிஎல்லில் நான் கண்டிப்பாக ஆர்சிபி கோப்பை வெல்ல உதவியாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

அவர் எப்படிபட்ட வீரர் தெரியுமா ? இதெல்லாம் அவர் கிட்ட தான் கத்துக்கட்டேன் ! - ஆர்சிபி வீரர் படிக்கல் 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *