தோனியை கலாய்த்த பீட்டர்சனுக்கு செம்ம பதிலடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

தோனியுடன் பேசும் பழைய புகைப்படத்தை பகிர்ந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரை கிண்டல் செய்யும் விதமான கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.   கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]