இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தை மறந்து விடுங்கள் : பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியான்தத் 1

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்துவதாலும், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதாலும், உட்சக்கட்டமாக மும்பையில் 2008-ம் ஆண்டு தொடர் தாக்குதலில் ஈடுபட்டதாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவதில்லை என்ற முடிவை எடுத்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெற வேண்டுமென்றால் மத்திய அரசு அனுமதியை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தை மறந்து விடுங்கள் : பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியான்தத் 2

இதனால் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியால் இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான இடத்தில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில்தான் பதான்கோட் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் பாகிஸ்தான் உடனான தொடருக்கான இந்தியா விருப்பம் காட்டவில்லை.

சில தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியான சுஷ்மா சுவராஜ், தீவரவாத தாக்குதலை நிறுத்தும்வரை பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தை மறந்து விடுங்கள் : பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியான்தத் 3

இந்நிலையில் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரை மறந்து விடுங்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியான்தத் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ‘‘இந்தியா நம்முடன் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை. அப்படியோ விட்டுவிடுங்கள். இந்தியாவுடன் விளையாடாவிட்டால், நம்முடைய கிரிக்கெட் ஒன்னும் செத்துவிடாது. இந்தியா உடனான கிரிக்கெட்டை மறந்து, முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும்.

பாகிஸ்தான் - இந்தியா இடையிலான கிரிக்கெட்டை மறந்து விடுங்கள்: மியான்தத்

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா நம்முடன் கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் நம்முடைய கிரிக்கெட் மடிந்து விட்டதா?. இல்லையே, நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது சிறந்த உதாரணம் ஆகும். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை கொன்று விட முடியாது. 2009-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத போதிலும் நல்ல நிலைமையில் உள்ளோம்’’ என்றார். #INDvPAK #PCB #Miandad

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *