2020ம் ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது பாகிஸ்தான் !! 1

2020ம் ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது பாகிஸ்தான்

2020ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984 முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான போட்டித் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர், இப்போது டி20 தொடராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன் நடைபெற இருக்கிறது. இந்த தொடரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலே நடக்கும் எனக் கூறப்படுகிறது.

2020ம் ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது பாகிஸ்தான் !! 2
Indian players celebrate with the trophy after winning the Asia Cup final cricket match against Bangladesh, in Dubai, United Arab Emirates, early Saturday, Sept. 29, 2018. (AP Photo/Aijaz Rahi)

கடைசியாக இத்தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தியது. ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதன் பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படவில்லை.

ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால் மாற்றப்பட்டது.

2020ம் ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது பாகிஸ்தான் !! 3
BIRMINGHAM, ENGLAND – JUNE 04: Virat Kohli (C) of India celebrates as Ravindra Jadeja captures the wicket of Azhar Ali of Pakistan during the ICC Champions Trophy 

தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளது.

அதே வேளையில் தங்களால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதால் தங்களால் பாகிஸ்தான் செல்ல முடியாது எனவும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.,யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *