ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் சிட்னி டெஸ்டில் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டோனியை பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்துள்ளார்.என் சாதனை சதத்திற்கு புஜாரா உருதுணையாக இருந்தார்: ரிஷப் பன்ட் 1

இதற்கு முன் பரூக் இன்ஜினீயர் அடிலெய்டில் 89 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கிரண் மோரே ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், பார்தீவ் பட்டேல் 62 ரன்களும், எம்எஸ் டோனி ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் அடித்துள்ளனர்.

இதற்கு முன் எம்எஸ் டோனி பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் அடித்ததுதான் வெளிநாட்டு மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் சேர்த்து முதல் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது இந்திய அணி. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பந்த் – ஜடேஜா கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 224 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்த கூடுதலாக உதவியுள்ளது. என் சாதனை சதத்திற்கு புஜாரா உருதுணையாக இருந்தார்: ரிஷப் பன்ட் 2

டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் குறிப்பிட்ட டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 595 ரன்களுக்கு அதிகமாக எடுத்து தோற்றதில்லை. (2017-ல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 595/8 எடுத்தது. பிறகு விளையாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 539 எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 160 ரன்களில் ஆட்டமிழக்க, 3 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து அசாத்தியமான வெற்றி கண்டது நியூஸிலாந்து.) இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவேண்டுமென்றால் புதிய வரலாறு படைத்தாகவேண்டும்.

இதன்பிறகு 10 ஓவர்கள் வரை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 19, கவாஜா 5 ரன்களுடன் களத்தில் உள்ளாகள். ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் 598 ரன்கள் பின்தங்கியுள்ளது.



  • SHARE

    விவரம் காண

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

    இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...