மறக்க முடியாத ஐபிஎல் தொடர் இது தான்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 1

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என அனைத்து அணிகளும் தங்களின் பயிற்சிகளை தீவிரப்படுத்தி கொண்டுள்ளது. பயோ பப்பில் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என்ற போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத ஐபிஎல் தொடர் இது தான்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 2

இந்நிலையில் கடந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக செயல்படவில்லை முதல் பாதி போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தினார், பின் அடுத்த சில போட்டிகளில் இங்கிலாந்து அணி வீரர் இயான் மோர்கன் தலைமையில் செயல்பட்டது. இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இதுவரை 2 முறை ஐபிஎல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையில் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளது, அதற்குப் பின் எந்த ஒரு ஒரு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

மறக்க முடியாத ஐபிஎல் தொடர் இது தான்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 3

இதனால் 2021 கான ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன்சிங் ஷகிப் அல் ஹசன் போன்ற முக்கியமான வீரர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 11 சென்னையில் நடக்க உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக நடக்க உள்ள போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தயாராகி வருகிறது.

மறக்க முடியாத ஐபிஎல் தொடர் இது தான்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 4

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 2014 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்நிலையில் அவரிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் என்றால் எதைக் கூறுவீர்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் அவர் கூறியதாவது 2014 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது தான் என்னால் மறக்கவே முடியாது.வெற்றி பெற்றபின் தெரு முழுக்க 1000க்கும் அதிகமான ரசிகர்கள் ஆரவாரமாக எங்களை வரவேற்றனர் இதுதான் என் வாழ்வின் சிறந்த ஒரு சம்பவம் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். மேலும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் அற்புதமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

மறக்க முடியாத ஐபிஎல் தொடர் இது தான்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 5

மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரரான கமலேஷ் நாகர் கோட்டி ஆகிய இருவரின் பந்துவீச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *