ரசிகர்களின் 48 வருட கனவை நிறைவேற்றியது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணி !! 1

ரசிகர்களின் 48 வருட கனவை நிறைவேற்றியது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களின் 48 வருட கனவை நிறைவேற்றியது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணி !! 2

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா மார்கிராமின் (152) அபார சதத்தால் 488 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கவாஜா (53), டிம் பெய்ன் (62), பேட் கம்மின்ஸ் (50) ஆகியோரின் அரைசதங்களால் 221 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

ரசிகர்களின் 48 வருட கனவை நிறைவேற்றியது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணி !! 3

267 ரன்கள் முன்னிலைப் பெற்ற போதிலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸ் (120), டீன் எல்கர் (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் ஒட்டுமொத்தமாக 611 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

612 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மோர்னே மோர்கல் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 23 ரன்னுடனும், ஷேன்மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ரசிகர்களின் 48 வருட கனவை நிறைவேற்றியது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணி !! 4

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை பிலாண்டர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஷேன் மார்ஷ் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் மிட்செல் மார்ஷ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால், அதில் இருந்து மீளமுடியவில்லை. அடுத்து வந்த கம்மின்ஸ் (1), சேயர்ஸ் (0), டிம் பெய்ன் (7) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். நாதன் லயன் ரன்அவுட் ஆக ஆஸ்திரேலியா 119 ரன்னில் சுருண்டது. பிலாண்டர் இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட்டில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ரசிகர்களின் 48 வருட கனவை நிறைவேற்றியது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணி !! 5
தென்ஆப்பிரிக்கா 492 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகளை கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 3-1 எனக்கைப்பற்றியது. 1970-க்குப் பிற தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கிடையாது. இந்த தொடரை வென்று 48 வருட சோகத்திற்கு முடிவு கட்டியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.