'பிங்க் டெஸ்ட்' முதல் நாள்: பேட்டிங்கிலும் இந்தியா பலே.. முழி பிதுங்கும் வங்கதேசம்..! 1

பிங்க் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 68 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்துவதால் இதை காண ஏராளமானோர் குவிந்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

'பிங்க் டெஸ்ட்' முதல் நாள்: பேட்டிங்கிலும் இந்தியா பலே.. முழி பிதுங்கும் வங்கதேசம்..! 2

துவக்க வீரர் இம்ருள் கயேஸ் 4 ரன்களுக்கும் கேப்டன் மோமினுல், ரஹீம் மற்றும் மிதுன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். மஹமதுல்லா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

நன்கு ஆடிவந்த லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, சமி வீசிய பந்தில் தலையில் அடிபட்டதால் நிலைகுலைந்து ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறினார். இவருக்கு பதிலாக மெய்தி ஹாசன் உள்ளே எடுத்து வரப்பட்டார். அதன் பின் வந்த வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

'பிங்க் டெஸ்ட்' முதல் நாள்: பேட்டிங்கிலும் இந்தியா பலே.. முழி பிதுங்கும் வங்கதேசம்..! 3

இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு வங்கதேச அணி சுருண்டது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், சாமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 14 ரன்களிலும், ரோகித் சர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் கோலி இருவரும் நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் கடந்த புஜாரா 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலியும் அரைசதம் கடந்தார்.

'பிங்க் டெஸ்ட்' முதல் நாள்: பேட்டிங்கிலும் இந்தியா பலே.. முழி பிதுங்கும் வங்கதேசம்..! 4

முதல் நாள் முடிவில் இந்திய அணி 274 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் கேப்டன் கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் இருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *