மிரட்டல் வெற்றிக்கு இந்த இரண்டு வீரர்கள் தான் முக்கிய காரணம்; விராட் கோஹ்லி பெருமிதம் !! 1

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மிரட்டல் வெற்றிக்கு இந்த இரண்டு வீரர்கள் தான் முக்கிய காரணம்; விராட் கோஹ்லி பெருமிதம் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, தவான் (16), சுப்மன் கில் (33) ஆகியோர் நல்ல துவக்கம் கொடுக்காவிட்டாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் கோஹ்லி 63 ரன்களும், ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 66 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் 75 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 59 ரன்களும் எடுத்து கை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 49.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 289 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மிரட்டல் வெற்றிக்கு இந்த இரண்டு வீரர்கள் தான் முக்கிய காரணம்; விராட் கோஹ்லி பெருமிதம் !! 3

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி பேசுகையில், “நாங்கள் இந்த போட்டி முழுவதும் நெருக்கடிக்குள்ளே இருந்தோம். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களை இன்றைய போட்டியில் களமிறக்கியதால் அணிக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. ஆடுகளுமும் பந்துவீச்சாளர்கள் சாதகமாக இருந்ததாக நினைக்கிறேன், அதுவே எங்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையையும் கொடுத்தது. கடந்த பல மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாததால் கடும் சவாலை சந்தித்து தான் ஆக வேண்டும். ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா மிக அருமையாக விளையாடினர், ஆஸ்திரேலிய போன்ற ஒரு அணியை எதிர்த்து விளையாடும் போது இது மாதிரி விளையாடுவது நிச்சயம் தேவை” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *