பிட்ச் மோசமாக இருந்தது; டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை !! 1

பிட்ச் மோசமாக இருந்தது; டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 12-வது சீசனின் 5வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பிரித்வி ஷா 16 பந்தில் 5 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். ரிஷப் பந்த் 13 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கொலின் இங்கிராம் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீமோ பால் டக் அவுட்டானார்.

பிட்ச் மோசமாக இருந்தது; டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை !! 2

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தவான் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அம்பத்தி ராயூடு 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தாலும், மற்றொரு துவக்க வீரரான சேன் வாட்சன் 44 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார்.

பிட்ச் மோசமாக இருந்தது; டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வேதனை !! 3

இதனையடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 30 ரன்களும், தோனி 32* மற்றும் கேதர் ஜாதவ் 28 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 19வது ஓவரின் 4வது பந்தில் இலக்கை அடைந்த சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில்  சென்னை அணியுடனான தோல்வி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர்,  பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. பொதுவாக நான் எப்பொழுதும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள திணற மாட்டேன், ஆனால் இன்றைய போட்டியில் என்னால் சுழற்பந்துகளை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதே போல் எங்கள் அணியில் சிறந்த பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டும் பேட்டிங்கின் போது சிரமப்பட்டுள்ளார். 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், அதே போல் பவர்ப்ளே ஓவர்களில் சென்னை அணியை கட்டுப்படுத்தாமல், அதிக ரன்கள் விட்டு கொடுத்து விட்டோம். இது வெறும் இரண்டாவது போட்டி தான் என்பதால் இந்த தோல்வியை பாசிட்டிவ்வாக எடுத்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *