3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்து இருந்தனர். ஸ்டீவ் ஸ்மித்(131), புகோவ்ஸ்கி (62) மற்றும் லாபுசாக்னே (91) ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதில் ஸ்மித் 81, மார்னஸ் 73 மற்றும் கிரீன் 84 ரன்களைக் குவித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.
இந்த 3வது டெஸ்டில் போட்டியில் ஸ்மித் இடைவேளையின் போது ரிஷப் பண்ட் போட்டு வைத்திருந்த கார்டை மாற்றியமைத்தார். சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட்டை குழப்புவதற்காக ஸ்மித் இதை செய்து அங்கிருந்து கேமராவில் மாட்டிக்கொண்டார். இதனால் ஸ்மித்தை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மூன்றாவது போட்டியின் முடிவில் ஸ்மித்திற்கு ஆட்ட நாய்கன் விருது வழங்கப்பட்டது. ஸ்மித் இந்த மூன்றாவலு டெஸ்டின் முதல் இன்னிஸ்சில் 131 ரன்கள் குவித்தும், இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்களளும் குவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது ஸ்மித்திற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்கள் ஸ்மித் செய்த செயலுக்கு ஆட்ட நாய்கன் விருதா ? என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.
