வெளிநாட்டு வீரர்கள் பாதியில் நாடு திரும்புவது சரியல்ல; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 1
வெளிநாட்டு வீரர்கள் பாதியில் நாடு திரும்புவது சரியல்ல; சுனில் கவாஸ்கர் சொல்கிறார்

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் வெளிநாட்டு வீரர்கள் தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே நாடு திரும்புவது சரியான நடைமுறை இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 4-வது இடம்பிடித்ததால் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

வெளிநாட்டு வீரர்கள் பாதியில் நாடு திரும்புவது சரியல்ல; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 2

லீக் போட்டியின்போது கடைசி போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தேசிய அணியில் விளையாடுவதற்காக சென்று விட்டனர். இதனால் கொல்கத்தா அணிக்கெதிரான எலிமினேட்டரில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த போட்டியில் இருவருக்கும் பதில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் அணியிடம் இடம்பிடித்தனர். இவர்களால் பெரிய அளிவில் சாதிக்க முடியவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

வெளிநாட்டு வீரர்கள் பாதியில் நாடு திரும்புவது சரியல்ல; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 3

அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்கும்போது வீரர்கள் மற்றும் ஆலோசகர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா? என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களை ஏலத்தில் எடுக்கக்ககூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் கோஹ்லி, தோனி;

இங்கிலாந்தில் 2020-ம் ஆண்டு நடக்கும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய வீரர்கள் விராட்கோலி, தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கும் என்று இங்கிலாந்தில் வெளிவரும் டெய்லி மெயில் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள் பாதியில் நாடு திரும்புவது சரியல்ல; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 4

இதற்கான காரணமாக, இந்திய வீரர்களை இங்கிலாந்தின் 100 பந்துகள் போட்டியில் விளையாட அனுமதிக்கும் பட்சத்தில் அந்த நாட்டில் ஐபிஎல் போட்டிக்கான முதலீட்டாளர்களை இந்தியாவில் இழுக்க முடியும் என பிசிசிஐ நம்புகிறது.

இப்போது ஐபிஎல் போட்டியில் இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் இருக்கும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இழுக்கும் முயற்சியாகவே பிசிசிஐ அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *