வைரசின் தாக்கம் குறைந்த மீண்டும் கிரிக்கெட் விளையாட இவ்வள்வு நாட்கள் ஆகும்: க்ரேம் ஸ்மித் கணிப்பு 1

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் வீரர்கள் தொடருக்கு தயாராக குறைந்தது ஆறு வாரங்கள் தேவை என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச, உள்ளூர் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிறிது நேரம் உடற்பயிற்சிக்குப்பின் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி பொழுதை போக்குகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வீரர்கள் தயாராக குறைந்த 42 நாட்கள் ஆகும் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டின் இடைக்கால இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

வைரசின் தாக்கம் குறைந்த மீண்டும் கிரிக்கெட் விளையாட இவ்வள்வு நாட்கள் ஆகும்: க்ரேம் ஸ்மித் கணிப்பு 2
Photo by: Ron Gaunt /SPORTZPICS for BCCI

கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால், எந்தவொரு கிரிக்கெட் தொடருக்கும் வீரர்கள் தயாராக, அதற்கு முன் 42 நாட்கள் தேவை என்று மதிப்பிடுகிறோம்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா அணி ஜூன் மாதத்தில் இலங்கை சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஸ்மித் கூறுவதை வைத்து பார்த்தார் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்கள் வந்தால் கூட இலங்கை தொடர் சாத்தியமில்லை.

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூலை 15-ந்தேதிக்குப்பின் நடக்க இருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வந்தால் தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் இருந்து கிரிக்கெட்டை தொடங்க வாய்ப்புள்ளது.வைரசின் தாக்கம் குறைந்த மீண்டும் கிரிக்கெட் விளையாட இவ்வள்வு நாட்கள் ஆகும்: க்ரேம் ஸ்மித் கணிப்பு 3

உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 172 பேரில், 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே, 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை நிலை நாட்டும் பணியில் ஈடுபடும் காவல்துறையினரை தாக்கினால், அவர்கள் மீது தேசத்துரோக சட்டம் பாயும் என்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முசாபர் நகரில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் கண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாசிகள் சிலர்,  போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஒரு காவல் ஆய்வாளர், காவலர் படுகாயம் அடைந்தது நினைவிருக்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *