உங்க அரசியல் எங்களை பிரித்துவிடாது… ஷாஹித் அப்ரிடி அதிரடி

இந்திய பாகிஸ்தான் இடையேயான அரசியல் பிரச்சனைகள், இந்திய கேப்டன் கோஹ்லியுடனான தனது நட்பை எப்பொழுதும் பிரிக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்தே, இந்திய அணிக்கு எதிரியாக பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியின் எதிரியாக இந்திய அணியும் பாவிக்கப்பட்டு வருகிறது.

Kolkata: Pakistan captain Shahid Afridi and Indian captain M S Dhoni at the toss during World T20 match at Eden Garden in Kolkata on Saturday. PTI Photo by Swapan Mahapatra (PTI3_19_2016_000271B)

மேலும் இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைகளும் சமீப காலமாக அதிகரித்து வருவதால், இனி ஒரு போதும் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காது என்று தற்போதைய மத்திய அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டிலும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மேல் ரசிகர்கள் ஏற்கனவே கடுப்பில் இருக்கும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான அரசியல் பிரச்சனைகளால் கோஹ்லியுடனான தனது நட்பில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அப்ரிடி “இரு நாடுகள் இடையேயான அரசியல் பிரச்சனைகளுடன் எங்களது நட்பை வரையறுக்க இயலாது. கோஹ்லி மிகச்சிறந்த மனிதர். நான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு அவர் உதவி செய்ததை என்னால் மறக்க முடியாது, அவரது திருமணத்திற்கு நானும் எனது வாழ்த்தை தெரிவித்திருந்தேன். நாங்கள் இருவரும் அதிகமாக பேசியது கிடையாது, ஆனால் கோஹ்லி என்னிடம் பேசியுள்ள ஒரு சில வார்த்தைகளில் இணக்கமான உணர்வு வெளிப்படும்.

தனிப்பட்ட மனிதர்கள் இரு நாட்டின் உறவிற்கு  ஒரு வடிவம் கொடுக்க முடியும் என்பதற்கு கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் உதாரணமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாகிஸ்தானுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து நான் அன்பையும், மரியாதையும் பெற்றுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார் அப்ரிடி. • SHARE

  விவரம் காண

  இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் அளிக்கப்படாததால், மும்பை அணிக்காக ஆட தயாராகிறார் ரோகித் சர்மா!!

  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. இதனால், மும்பை அணிக்காக ஆட தயாராகி வருகிறார். இங்கிலாந்து...

  ஒழுக்கத்தை மீறியதற்காக சர்வதேச போட்டியில் இருந்து இலங்கை வீரர் திடீர் தடை!!

  சர்வதேச போட்டியில் இருந்து ஒழுக்கத்தை மீறிய காரணத்திற்காக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா இடைக் தடை விதிக்கப்பட்டுள்ளார். நிலுவையில் இருந்த விசாரணையின்...

  இந்திய அணியின் பஸ் டிரைவருக்கு உதவி செய்த ரெய்னா – நெகிழ்ச்சியுடன் கூறிய பஸ் டிரைவர்

  இந்திய கிரிக்கெட் அணியின் பஸ் டிரைவர்  ஜெப் குட்வின் தனக்கு உதவி பற்றி கூறியுள்ளார்   கிரிக்கெட் வீரர்கள் வீரர்கள் அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட்...

  டாப்-5 : குறைந்த ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

  ஜிம்பாப்வே எதிரான ஒருநாள் போட்டியின் போது சதம் அடித்ததன் மூலம் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை...

   இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு !!

   இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிக...