ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டதில் ஸ்மித்திற்கு கிடைக்கும் பாராட்டுக்களை பெற பந்து வீச்சாளர்களும் தகுதியானவர்கள் என ரிக்கி பா்ணடிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதன்மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஸ்மித்தின் பேட்டிங்தான். அவர் மூன்று டெஸ்டில் ஐந்து இன்னிங்சில் மூன்று சதங்கள் உள்பட 671 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 134.20 ஆகும். ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க ஸ்மித்தின் பேட்டிங்தான் முக்கிய காரணம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.ஸ்டீவ் ஸ்மித்தை மற்றும் ஏன் பாராட்டுகிறீர்கள்: ரிக்கி பாண்டிங் கடுப்பு 1

இந்நிலையில் அவருக்கு இணையாக பாராட்டை பெற ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தகுதியானவர்கள் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஸ்டீவ் ஸ்மித் என்ற ஒருவரால் மட்டும் ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கவில்லை. ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தை பற்றிதான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த பந்து வீச்சு யூனிட்டும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் மாறுபட்ட பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்து பந்து வீச்சைவிட ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சு உயர்வாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை விட இங்கிலாந்தின் பந்து வீச்சில் அதிக அளவில் குறைபாடு இருந்தது. எந்தவித ஈவுஇரக்கமின்றி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தாக்குதலை நடத்தினார்கள்’’ என்றார்.

ஸ்டீவ் ஸ்மித்தை மற்றும் ஏன் பாராட்டுகிறீர்கள்: ரிக்கி பாண்டிங் கடுப்பு 2
LEEDS, ENGLAND – AUGUST 23: Pat Cummins of Australia celebrates after taking the wicket of Rory Burns of England during Day Two of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 23, 2019 in Leeds, England. (Photo by Ryan Pierse/Getty Images)

இந்நிலையில் ஜோ ரூட் கூறியதாவது:

இந்தத் தொடரில் பந்துவீச்சே பெரும்பங்கு ஆதிக்கம் செலுத்தியது, பேட்டிங்கில் ஸ்மித்தை எடுத்து விட்டால் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஸ்டீவ் ஸ்மித் இத்தகைய பார்மில் இருக்கும் போது அவருக்கு வீசுவது கடினமே. அவர் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும், ஆனால் நாங்கள் இதுவரை அதைச் செய்யவில்லை, இதற்கான விலையைக் கொடுத்து விட்டோம்.

என்றார் ஜோ ரூட்.

ஆனால் ஜோ ரூட் விளக்கத்தில் திருப்தியடையாத ஆஸி. ஊடகம் அவருக்கு பதிலளிக்கும் விதமாக, ” ஸ்மித் மட்டுமே வித்தியாசம் எனில் ஹேசில்வுட், கமின்ஸ், லபுஷேன் ஆடவில்லையா?” என்ற ரீதியில் கேள்வி எழுப்பி ரூட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.

ஸ்மித் மட்டுமே வித்தியாசம் என்று கூறுவதன் மூலம் கமின்ஸ், ஹேசில்வுட், அபார பவுலிங்கையும் 58 ரன்கள் சராசரி வைத்துள்ள லபுஷேன் பேட்டிங்கும் என்ன மாதிரியான பங்களிப்பு செய்துள்ளன, இவற்றையெல்லாம் ஜோ ரூட் குறைத்து மதிப்பிடலாமா என்று கேள்வி எழுப்பி கட்டுரை வெளியிட்டுள்ளது. • SHARE
 • விவரம் காண

  வீடியோ: மின்னல் அடிக்கும் போது தன் மகளை பைக்கில் வைத்து சுற்றும் தல தோனி

  தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஊரடங்கு காலங்களில் தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது...

  வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

  தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலக அளவில்...

  “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

  "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

  சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

  இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...