Cricket, Virat Kohli, India, Sri Lanka, West Indies

இலங்கை அணி பார்ப்பதற்கு மிக கம்பீரமான அணியாக தெரிந்தாலும் அவ்வளவு தெளிவான, செயல்படும் அணியாக தெரியவில்லை. சமீபத்தில் ஜீம்பாப்வே அணியுடனான 5 போடிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் தோற்று அதற்கு சான்றாகும். அதன் காரணமாகா இலங்கையின் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது. அந்த காயம் ஆறுவதற்குள் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை 26 ஆண்டுகளுக்கு பின்னர் இழந்து அடி வாங்கி வருகிறது.

முதல் கதை :

இந்தியா இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது . நான்காவது நாளே இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது .

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 70 ரன்கள் குவித்து, இரண்டாம் இன்னிங்ஸ் பந்து வீச்சில் 5 விக்கெட் என மொத்தம் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஒரு நாள் தொடர் :

16ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்தியாவின் ஒருநாள் தொடர் ஆரம்பம் ஆகவுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா இறுதி போட்டியில் தோற்றிருந்தாலும் தற்போது உள்ள ஒருநாள் அணியின் முதல் மூன்று பேட்ஸ் மேன்களே எந்த இந்த இலக்கையும் அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு திறமைசாளிகள்.

இம்மாதிரியான இந்திய அணியுடன் மோதிப் போகும் இலங்கை அணி தப்பிக்குமா இல்லை எதிர்த்துப் போராடுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கோலி, அஷ்வின்,ஜடேஜவிற்க்கு ஓய்வு :

தற்போதய ஒருநாள் அணியின் கேப்டன் இடையறாத ஓய்வில்லாத பணியில் உள்ளார். அவர் இந்தியா ஆடிய 43 போட்டிகளில் தொடர்ந்து 42 போட்டிகள் ஆடியுள்ளார். எனவே அவருக்கு ஓய்வு அளிக்கும் முடிவும் எட்டப்படும் எனத்தெரிகிறது. இருந்தாலும் இந்திய அணி சிறப்பான அணிதான். ரோகித் சர்மா அல்லது அஜின்கியா ராகானே தலைமையில் தளம் காணும் எனத் தெரிகிறது.

இப்போது கணிக்கப்பட்ட இந்திய அணியை பார்ப்போம்.

1) சிகர் தவான்

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 1
Indian batsman Shikar Dhawan plays a shot during the first day of the first Test match between Sri Lanka and India at Galle International Cricket Stadium in Galle on July 26, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

நல்ல பார்மில் இருக்கும் சிகர் தவான் ஆட்டோமெடிக்காக தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் அமர்வார். இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி 191 ரன்களை குவித்ததே அதற்கு சான்று மேலும் அவரால் தொடக்கத்தில் இடது-வலது பேட்ஸ்மேன்கள் என கலவையாக கிடைப்பது கூடுதல் பலம்.

2) ரோகித் சர்மா

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 2
BIRMINGHAM, ENGLAND – JUNE 04: Rohit Sharma and Shikhar Dhawan of India go out to bat during the ICC CHampions Trophy match between India and Pakistan at Edgbaston on June 4, 2017 in Birmingham, England. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சொல்லவே தேவையில்லை கடந்த 4 வருடங்களாகவே இந்திய ஒருநாள் அணியின் தொடக்கத்தில் மிகச்சிறந்து விளங்கி வருகிறார். இவர் அதிரடி இன்னொரு 200 ரன்களை வரவழைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

3) விராட் கோலி

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 3
during the Victoria Bitter One Day International match between Australia and India at Manuka Oval on January 20, 2016 in Canberra, Australia.

அதிகாரப் பூர்வமாக கொலிக்கு இன்னும் ஓய்வு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் எப்போதுமே பார்மில் இருக்கும் வீரர், 3ஆம் இடத்தை அடைப்பார். மேலும் தற்போது உலக ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த 3ஆம் வரிசை பேட்ஸ்மேன் விராட் கொலி ஆவார்.

4) அஜின்க்யா ரகானே

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 4

நான்காவது வரிசையில் ரகானேவே நன்றாக செயல்பட்டு வருகிறார். அந்த இடத்தில் நிதானமாக ஆட ரகானேவே பொருத்தமானவர். மேலும் அவருடய பார்மும் நன்றாகத்தான் உள்ளது. இலங்கையுடனான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்து தனது பார்மை நிரூபித்துள்ளார் ரகானே.

5) யுவராஜ் சிங்:

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 5

கடந்த தொடர்களில் பெரிதும் சோபிக்காத சிக்சர் கிங் யுவராஜ் சிங் 5 வது வரிசையில் ஆடுவார் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த தொடரிலும் அவரது பார்மை நிரூபிக்காது பட்சட்க்ஹ்தில் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவதுடன் அவரது 2014 உலகக்கோப்பை கனவும் சுக்கு நூறாகிவிடும்.

6) மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்)

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 6

ஒருநாள் போட்டியில் மிகச்சிறந்த பினிசர் ஆன தோனி பினிசிங் இடமான 6 வது இடத்தை பிடிப்பார் எனலாம். மேலும் விக்கெட் கீப்பிங் பணியை தற்போது அவர் செய்யும் அளவுக்கு செய்து பேட்டிங்களும் சிறக்க அவறை தவிர வேறொருவர் இல்லை எனலாம்.

7) கேடர் ஜாதவ்

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 7

இவர் சமீபத்திய இந்திய வரவு. ரெய்னாவின் இடத்தை அடத்து பினிசிங்கில் சிறப்பாகத்தான் செயல்பட்டார். அவ்வப்போது ஆப் ஸ்பின்னிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி 7 வது இடத்தை பிடித்துக் கொண்டுள்ளார்.

8) ஹர்திக் பாண்ட்யா

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 8

நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்க்கு கிடைத்த சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவரத் தவர இந்த இடத்தை தற்போது எவராலும் நிரப்ப முடியாது எனலாம். கிடைத்த போதெள்ளாம் மட்டையை கிடாசி விளாசி தள்ளுவார் இவர். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அவரை சதம் கடந்து அசத்தியவர்.

9) அக்சர் படேல் 

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 9

ஜடேஜா மற்றும் அஷ்வினுக்கு ஓய்வு கொடொக்கப்படும் என்ற முடிவால் அக்சர் படேலுக் இடம் கிடைக்கும் எனலாம். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினால் ஜடேஜாவையும் ஓரம் தள்ளலாம் என்பது நிதர்சனம்.

10) குல்திப் யாதவ் 

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 10

22 வயதே ஆன இடது கை சைனாமேல் பந்து வீச்சாளர். திறமை இருந்தாலும் அணியில் இடம் கிடைக்காதவர். அஷ்வினுக்கு பதிலாக இந்திய ஒருநாள் அணியில் இறக்கப்பட வாய்ப்பு அதிகம்.

11) புவனேஷ்வர் குமார்

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 11

சுழல் ஜாலம் காட்டும் புவனேஷ்வர் குமார் வேகப்பந்து யூனிட்டில் கட்டாயம் இடம் பெறுவார் டெஸ்ட் அணியில் இவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

12) முகமது சமி 

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 12

புயல் வேகம் மற்றும் சுழல் ஆகிய இரண்டு கலந்து கண்டிப்பாக இடம் பெற வாய்ப்புகள் அதிகம். இவர் 9 ஆவது அல்லது 10 ஆவது இடத்தை பிடிக்க வாய்புகள் மிக அதிகம்.

13) ஐஸ்பிரிட் பும்ரா

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 13

டெத் பவுளிங் மன்னன், யார்க்கருக்கு பெயர் போனவர். இவரை வைத்து பல மேட்சுகள் டெத் பவுளிங் போடு சாதிக்கலாம். இவரும் முதல் பதினோன்றில் இடம் பெற வாய்புகள் மிக அதிகம்.

14) உமேஷ் யாதவ்

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 14

சமிபகாலமாக பார்மின் உச்சத்தில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். இவர் கண்டிப்பாக முதல் பதினொன்றில் இடம் பெறுவார்.

15) கே எல் ராகுல் 

ஒரு நாள் தொடர் : கணிக்கப்பட்ட இந்திய அணி 15

காயத்திலிருந்து மீண்டு டெஸ்ட் போட்டியில் அரைசதம் கண்ட ராகுல் தொடக்க ஆடகாரரா தவானுக்கு வதில் இறங்க வாய்ப்புகள் உள்ளது.

 

Leave a comment

Your email address will not be published.