கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு; ரோஹித் சர்மா வருத்தம் !! 1

கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு; ரோஹித் சர்மா வருத்தம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது.

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு; ரோஹித் சர்மா வருத்தம் !! 2

பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது

கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு; ரோஹித் சர்மா வருத்தம் !! 3

நியூசிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது;

வெற்றியின் அருகில் வரை வந்து வெற்றியை தவறவிட்டது சற்று வேதனையாக உள்ளது. 210+ ரன்கள் என்பது டி.20 போட்டிகளில் சற்று கடினமானது தான். ஒருநாள் தொடரில் சிறப்பாகவே விளையாடினோம். டி.20 தொடரை இழந்துள்ளதால் வீரர்கள் சற்று வேதனை அடைந்துள்ளனர். இந்த தோல்வியில் இருந்து சில பாடங்கள் கற்றுள்ளோம். தவறுகளை சரி செய்து கொண்டு முன்னேற முயற்சிப்போம்” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published.