ப்ரிதீவ் ஷா மூன்றாவது போட்டியில் எண்ட்ரீ கொடுப்பார்; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 1

ப்ரிதீவ் ஷா மூன்றாவது போட்டியில் எண்ட்ரீ கொடுப்பார்; ரவி சாஸ்திரி நம்பிக்கை

பயிற்சி போட்டியின் போது காயமடைந்த இளம் வீரர் ப்ரிதீவ் ஷா, மூன்றாவது போட்டியில் களமிறங்குவார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நாளை இன்று துவங்கியது.

ப்ரிதீவ் ஷா மூன்றாவது போட்டியில் எண்ட்ரீ கொடுப்பார்; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 2

இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக நடத்தப்பட்ட பயிற்சி போட்டியின் ஏற்பட்ட காயத்தின் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ள இந்திய அணியின் இளம் வீரர் ப்ரிதீவ் ஷா, இரண்டாவது போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, மருத்துவர்கள் அறிவுரைகள் படி ப்ரிதீவ் ஷா சிறிது சிறிதாக குணமடைந்து வருகிறார். ப்ரிதீவ் ஷா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய மேலும் சில தினங்கள் தேவை என்பதால் அவர் இரண்டாவது  போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை, மூன்றாவது களமிறங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ப்ரிதீவ் ஷா மூன்றாவது போட்டியில் எண்ட்ரீ கொடுப்பார்; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 3

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே.எல் ராகுல். முரளி விஜய், சட்டீஸ்வர் புஜார, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திர அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

மார்கஸ் ஹரீஸ், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹசீல்வுட், டர்வீஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், ஜோஸ் ஹசீல்வுட்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *