இந்தியாவில் கிரிக்கெட் என்பது விளையாட்டையும் தாண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீரர்கள் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகின்றனர். அவர்களின் மனைவிகளும் வீரர்களினால் சிறிது பிரபலமடைகிறார். வீரர்களை உற்சாகப்படுத்த அவர்கள் மைதானத்திற்கே வந்துள்ளதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். அவர்கள் தற்போது வீரர்களின் மனைவி ஆவதற்கு முன்னர் என்ன வேலை (ப்ரொபசன்) செய்துகொண்டிருந்தனர் என்று தற்போது பார்ப்போம்.
1.இர்ஃபன் பதான் மனைவி சஃபா பெய்க்
சஃபா பெய்க் சௌதி அரேபியாவில் பிறந்தவர். அவர் மத்திய கிழக்கு நாடுகளில் அவரது ஆரம்ப காலத்தில் பிரபலமான ஒரு மாடல் ஆவார். அதன் பின்னர் ஒரு ஜெர்னலிஸ்டாகவும் பின்னர் மக்கள் தொடர்பு எக்சிக்யூடிவாகவும் வலை செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இர்ஃபான் பதானுடன் இவருக்கு திருமணம் ஆனது. அதன் பின்னர், இந்தியாவில் பதானுடன் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நகத்தில் கலை வேலைபாடுகள் செய்யும் நெய்ல் ஆர்டிஸ்டாக செயல்பட்டுவருகிறார். பதானுக்கு ஏற்ற மனைவியாக பல வேலைகள் அறிந்து திறமைசாலியாக உள்ளார் சஃபா பெய்க்.