இவர்தான் உண்மையான டெஸ்ட் பிளேயர்; மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்த புஜாரா ! 1

இவர்தான் உண்மையான டெஸ்ட் பிளேயர்; மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்த புஜாரா !

இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெறு வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் 10 விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இளம் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் புஜாரா அரை சதம் விளாசினர்.

இவர்தான் உண்மையான டெஸ்ட் பிளேயர்; மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்த புஜாரா ! 2

இதனால் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிகொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. 

இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான புஜாரா கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 17, 3, 43, 0 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா முதல் இன்னிங்சில் 176 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசியிருந்தார். 

இவர்தான் உண்மையான டெஸ்ட் பிளேயர்; மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்த புஜாரா ! 3

இதையடுத்து நடைபெற்ற 2-வது இன்னிங்சில் புஜாரா  205 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்களை குவித்து இந்திய அணிக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்து வந்தார்.  இதில் 12 பவுண்டரிகளை விளாசினார். இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் புஜாரா மீண்டும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று நிரூபித்துள்ளார்.

இன்றைய போட்டியின் மூலம் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் புஜாரா 48 சராசரியை பெற்றிருக்கிறார். இதில் 26 அரை சதங்களையும் 18 சதங்களையும் அடித்திருக்கிறார். புஜாராவின் இந்த சாதனைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இவர்தான் உண்மையான டெஸ்ட் பிளேயர்; மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்த புஜாரா ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *