வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நெ.4 இடத்திற்கு பழைய வீரர்களை அழைக்கும் பிசிசிஐ! ராகுல், மனீஷ் பாண்டே காலி? 1

கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனையில் இருந்து வரும் இந்தியாவின் நெ.4 இடத்திற்கு பழைய வீரர்கலையே அழைக்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது

உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி துவங்க உள்ளது. மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி வரும் 19ம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக ஆங்கில பத்திரிகையிடம் பேசிய தேர்வு குழு உறுப்பினர், “இந்திய அணி தேர்வு குழுவினரிடம் தோனி இதுவரை எந்தவிதமான தொடர்பும் கொள்ளவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நெ.4 இடத்திற்கு பழைய வீரர்களை அழைக்கும் பிசிசிஐ! ராகுல், மனீஷ் பாண்டே காலி? 2
India’s number four position was a subject of constant debate during the World Cup and Pujara said though he would have loved to take that spot in the squad, he is now looking forward to future assignments.

அவர் அணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பும் வெளியிடவில்லை. உலகக் கோப்பை தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் அணியில் இடம்பெறுவாரா? என்பது பற்றி தேர்வு குழுவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கும், பும்ராவிற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். டெஸ்ட் போட்டிகளில் கோலியும், பும்ராவும் அணிக்கு திரும்புவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நெ.4 இடத்திற்கு பழைய வீரர்களை அழைக்கும் பிசிசிஐ! ராகுல், மனீஷ் பாண்டே காலி? 3
Cricket, India, Australia, Rohit Sharma, Shikhar Dhawan, Ajinkya Rahane, KL Rahul

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனையில் இருந்து வரும் இந்தியாவின் நெ.4 இடத்திற்கு பழைய வீரர்கலையே அழைக்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது

 

அதே போல் ஒருநாள் போட்டிகளில் 4ம் நிலைக்கு நல்ல உத்தியுடன் ஆடக்கூடிய ரஹானே அல்லது புஜாரா அல்லது ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் பரிசீலிக்கப்படுவுள்ளார்கள் என்று தெரிகிறது. விஜய் சங்கர் தனது காயங்களை சரியாக நிர்வகிக்கவில்லை எனில் அவருக்கும் வாய்ப்புகள் பிரச்சினையாகும் என்றே தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *