இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நாளை நடைபெறவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா பேசியிருக்கிறார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போல் இங்கு இருக்காது ; இது எங்களுக்கு ஒரு அட்வான்டேஜாக இருக்கும் ! - புஜாரா பேட்டி 2

முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். 

ஆஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போல் இங்கு இருக்காது ; இது எங்களுக்கு ஒரு அட்வான்டேஜாக இருக்கும் ! - புஜாரா பேட்டி 3

இந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி 3ஆவது டெஸ்ட் போட்டி பிங்க் நிற பந்தில் நடைபெற இருப்பதால் வீரர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு சிரமமாக இருக்கும். இந்நிலையில் இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா இது குறித்து பேசியிருக்கிறார். 

ஆஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போல் இங்கு இருக்காது ; இது எங்களுக்கு ஒரு அட்வான்டேஜாக இருக்கும் ! - புஜாரா பேட்டி 4

புஜாரா பேசுகையில் “ ஆஸ்திரேலியாவில் நாங்கள் விளையாடிய பகலிரவு டெஸ்ட் போட்டி சிறிது மாறுபட்டதாக இருந்தது. அங்கு நாங்கள் விளையாடிய பீட்ச் சீம் பந்திற்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. நாங்கள் ஆட்டத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிந்து, அதன்படி முதல் பந்தில் இருந்தே கொண்டு செல்வோம்.

அதுமட்டுமின்றி இது ஹோம் மைதானம் என்பதால் எங்களுக்கு அட்வண்டேஜாக இருக்கும். நாங்கள் ஆஸ்திரேலியாவில் செய்த தவறை மீண்டும் இங்கு செய்ய மாட்டோம். இம்முறை நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று  நம்பிக்கையாக புஜாரா கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போல் இங்கு இருக்காது ; இது எங்களுக்கு ஒரு அட்வான்டேஜாக இருக்கும் ! - புஜாரா பேட்டி 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *