மிரட்டல் பேட்ஸ்மேன் மில்லரை தக்க வைத்து கொண்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் !! 1
மிரட்டல் பேட்ஸ்மேன் மில்லரை தக்க வைத்து கொண்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் !!

தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லரை, RTM கார்ட் முறையை பயன்படுத்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது அணியில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மிரட்டல் பேட்ஸ்மேன் மில்லரை தக்க வைத்து கொண்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் !! 2

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரும், இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான மில்லரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க முன்வந்தது, ஆனால் இவரை விட மனமில்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி RTM கார்ட் முறையை பயன்படுத்தி தனது அணியில் தக்க வைத்து கொண்டது.

மிரட்டல் பேட்ஸ்மேன் மில்லரை தக்க வைத்து கொண்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் !! 3

தனக்கான அடிப்பை விலையாக 1.50 கோடியை நிர்ணயம் செய்திருந்த இவர் இதுவரை ஐ.பி.எல் தொடரில் 66 போட்டிகளில் விளையாடி 1563 ரன்கள் எடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *