அவரே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டார்... தோல்விக்கு இது தான் காரணம்; டேவிட் மில்லர் சொல்கிறார் !! 1

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் டி.20 தொடரையும் வென்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அவரே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டார்... தோல்விக்கு இது தான் காரணம்; டேவிட் மில்லர் சொல்கிறார் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அவரே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டார்... தோல்விக்கு இது தான் காரணம்; டேவிட் மில்லர் சொல்கிறார் !! 3

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

அவரே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டார்... தோல்விக்கு இது தான் காரணம்; டேவிட் மில்லர் சொல்கிறார் !! 4

இந்தநிலையில், இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் தோல்வி குறித்து பேசிய டேவிட் மில்லர், போட்டியின் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாட தவறியதற்கு டி காக் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேவிட் மில்லர் பேசுகையில், “குவிண்டன் டி காக் போட்டியின் துவக்கத்தில் சற்று தடுமாறினார். அவரால் அசால்டாக சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடிக்க முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த போட்டியில் வெறும் 16 ரன்களில் வெற்றியை தவறவிட்டுள்ளோம். போட்டி முடிந்தபிறகு டி காக் என்னை பாராட்டியதோடு, துவக்கத்தில் சரியாக விளையாடாததற்கு என்னிடம் மன்னிப்பும் கேட்டார். இந்திய வீரர்கள் துவக்கத்தில் இருந்தே எங்கள் மீது அதிக அழுத்தத்தை கொடுத்தனர், தவறுகளை நிச்சயம் சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published.