ஹர்பஜன் சிங் அளவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் தாக்குதல் தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
“புள்ளி விவரங்கள் எப்போதும் பொய்த்தோற்றத்தை அளிக்கும். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் மைல்கல் அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆடினாலும் இவர் காலத்தின் கிரேட் வீரர்களில் ஒருவராக அஸ்வின் நினைவுகூரப்படுவார்.
ஹர்பஜன் போலவே அஸ்வினின் பந்து வீச்சுத் திறமை அபாரமானதுதான், ஆனால் ஹர்பஜன் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல.

ஒருவேளை ஹர்பஜன் காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சு அவ்வளவு வலுவானதாக இல்லை, ஹர்பஜன் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால் இந்தியா பிரச்சினையில் சிக்கும், எனவே அவர் அதிகம் தாக்குதல் முறையில் வீசினார், அஸ்வின் காலத்தில் ஷமி, யாதவ், புவனேஷ்வர் குமார், இசாந்த்சர்மா, இன்னும் ஜஸ்பிரீத் பும்ராவையும் கொண்டு வந்தால் ஜடேஜாவுடன் சேர்த்து அஸ்வின் உண்மையில் தாக்குதல் முறையில் வீச வேண்டிய தேவையுமில்லை.

எனவே அஸ்வின் தனது பங்கைச் செவ்வனே செய்கிறார். வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
ஹர்பஜன் சிங் அவர் காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் பவுலர். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. ஹர்பஜன் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால் இந்திய அணிக்குக் கடினம். வெங்கடேஷ் பிரசாத் சிறந்த டெஸ்ட் பவுலர் அல்ல. அப்போது ஹர்பஜன் சிங் தனித்து விக்கெட் வீழ்த்தும் பவுலராக இருந்தார். மரியாதையுடன் கூறுகிறேன் ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீநாத் நல்ல பவுலர்கள்தான் ஆனால் தற்போதைய இந்திய வேகப்பந்துக் கூட்டணியைக் காட்டிலும் அவர்கள் அச்சுறுத்தலாக திகழவில்லை” இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.
