இந்த வருட ஐபிஎல் கோப்பையையும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியே வெல்லும் என மும்பை அணியின் இளம் வீரரான ராகுல் சாஹர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முறையும் சாம்பியன் பட்டம் எங்களுக்கு தான் ; அடித்து சொல்லும் மும்பை வீரர் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்களும் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான ராகுல் சாஹர், இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த முறையும் சாம்பியன் பட்டம் எங்களுக்கு தான் ; அடித்து சொல்லும் மும்பை வீரர் !! 3

இது குறித்து ராகுல் சாஹர் பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியுடனான அடுத்த ஒரு சிறந்த தொடருக்காக ஆவலுடன் காத்துள்ளேன். எங்களுக்கு மிக சிறந்த பயிற்சியாளர்கள் கிடைத்துள்ளனர். ஜாஹிர் கான், ஜெயவத்தனே போன்ற ஜாம்பவான்கள் எங்களுக்கு பயிற்சியாளராக கிடைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்று கொண்டு வருகிறோம். கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் எங்கள் பயிற்சியாளர்களிடம் இருந்து அதிகமான விசயங்களை கற்று கொள்வோம் என நம்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வென்று 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என முழுமையாக நம்புகிறேன். எங்கள் வீரர்கள் அனைவரும் மிக சிறந்த பார்மில் உள்ளனர். குறிப்பாக ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அசால்டாக சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பார்கள், ரோஹித் சர்மா இந்த முறையும் கோப்பையை வெல்வார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை” என்றார்.

இந்த முறையும் சாம்பியன் பட்டம் எங்களுக்கு தான் ; அடித்து சொல்லும் மும்பை வீரர் !! 4

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட தொடருக்கான தனது முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *