என்னடா அந்த பையன வச்சு இப்படி விளையாடிட்டு இருக்கீங்க..? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோபம் !! 1

நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ராகுல் சாஹரின் பெயர் இடம்பெறாததற்கு முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, டி.20 உலகக்கோப்பை தொடரை முடித்துவிட்டு நேராக இந்தியா வருகிறது.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

என்னடா அந்த பையன வச்சு இப்படி விளையாடிட்டு இருக்கீங்க..? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோபம் !! 2

இந்த தொடரின் முதல் டி.20 போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் பெரிய எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட ராகுல் சாஹருக்கு நியூசிலாந்து தொடரில் இடம் கிடைக்கவில்லை.

என்னடா அந்த பையன வச்சு இப்படி விளையாடிட்டு இருக்கீங்க..? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோபம் !! 3

சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை எடுத்த இந்திய அணி, ராகுல் சாஹருக்கு போதிய வாய்ப்பே கொடுக்காமல் மீண்டும் சாஹலை அணியில் சேர்த்துள்ளது ரசிகர்களையும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ராகுல் சாஹருக்கு இடம் கொடுத்த இந்திய அணியின் முடிவிற்கு முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

என்னடா அந்த பையன வச்சு இப்படி விளையாடிட்டு இருக்கீங்க..? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோபம் !! 4

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “ராகுல் சாஹர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. டி.20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து சேர்க்கப்பட்ட ராகுல் சாஹருக்கு இப்போது ஏன் இடம் இல்லை.? அவர் எப்படி என்ன தவறு செய்துவிட்டார்.? டி.20 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு தான் கொடுக்கப்பட்டது அதில் அவர் ஒரு ஓவருக்கு 7.5 ரன்கள் வீதம் கொடுத்துவிட்டதால் அவர் இந்திய அணியில் விளையாட தகுதியில்லாத வீரராக மாறிவிட்டாரா..? இந்திய அணியின் தேர்வாளர்களில் ஒருவராவது ராகுல் சாஹரிடம் முறையான விளக்கம் கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *