நான் மீண்டு வந்துள்ளதற்கு இவர் மட்டும் தான் முக்கிய காரணம்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !! 1

இலங்கை அணிக்கு எதிரான் முதல் ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த நம்பிக்கையே காரணம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

நான் மீண்டு வந்துள்ளதற்கு இவர் மட்டும் தான் முக்கிய காரணம்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !! 2
India’s Kuldeep Yadav (C) celebrates after the dismissal of Sri Lanka’s Minod Bhanuka (not pictured) during the first one-day international (ODI) cricket match between Sri Lanka and India at the R.Premadasa Stadium in Colombo on July 18, 2021. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

நான் மீண்டு வந்துள்ளதற்கு இவர் மட்டும் தான் முக்கிய காரணம்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !! 3

இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்றைய போட்டியில் ரீ எண்ட்ரீ கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய குல்தீப் யாதவ், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிம் இருந்து கிடைத்த ஊக்கமே தனது சிறப்பான பந்துவீச்சிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

நான் மீண்டு வந்துள்ளதற்கு இவர் மட்டும் தான் முக்கிய காரணம்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !! 4

இது குறித்து குல்தீப் யாதவ் பேசுகையில், “பதட்டமும், நெருக்கடியும் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும். நான் நீண்ட இடைவேளைக்கு பிறகு விளையாடுகிறேன். இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் நிறைய விசயங்கள் குறித்து ஆலோசித்தேன். ராகுல் டிராவிட் எனக்கு ஆதரவாக இருந்தார், அவர் என்னை அதிகம் ஊக்கப்படுத்தினார். எனது சிறப்பான பந்துவீச்சிற்கு ராகுல் டிராவிட்டிடம் இருந்து கிடைத்த ஆலோசனைகள் மற்றும் ஊக்கமே முக்கிய காரணம். அணியின் வெற்றியில் எனது பங்கும் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *