தோல்விக்கு இது தான் காரணம்… கடுப்பில் ஷிகர் தவான்

மழை மற்றும் மில்லருக்கு கொடுத்த வாய்ப்புகளை தவறவிட்டதே நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 289 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும், 202 ஆக குறைக்கப்பட்டது.

மழை நின்றதும் போட்டி துவங்கிய பின், ஆம்லா (33), டிவில்லியர்ஸ் (26), மில்லர் (39) ஆகிய நட்சத்திர வீரர்கள் தங்கள் பங்கை  சரியாக செய்தாலும் அணிக்கு இறுதி வரை இருந்து வெற்றியை பெற்றுத்தரமால் விக்கெட்டை  இழந்து வெளியேறினர்.

இதன் பின் வந்த பெலேகுலாயோ மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் க்ளேசனுடன் ஜோடி சேர்ந்து, ஒரே ஓவரிலேயே போட்டியை மாற்றி தென் ஆப்ரிக்கா அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மில்லர் கொடுத்த வாய்ப்பை தவறவிட்டதே காரணம் என்று இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தவான், மழையின் குறுக்கீட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டதும், மில்லரின் விக்கெட்டை தவற விட்டதுமே இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம்.

மில்லர் சிறப்பாக விளையாடினார் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தது. அவர் அடித்த ஒரு கேட்சை தவறவிட்டதும், நோ பாலில் அவரது விக்கெட்டை எடுத்ததும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருந்தாலும், இரண்டு போட்டிகள் உள்ளன. அதில் ஒன்றில் வெற்றிப் பெற்றாலும் நாங்கள் கோப்பையை வென்றிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.



  • SHARE

    விவரம் காண

    டிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி !!

    டிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளி மோதிய ஐபிஎல்., தொடரின் எலிமினேட்டர் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில்...

    ஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி !!

    ஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி ஐ.பி.எல் டி.20 தொடர் தனது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டதாக இளம்...

    இதெல்லாம் பத்தாது  பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் !!

    இதெல்லாம் பத்தாது  பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் ஐபிஎல் 2018 சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெல்லி...

    கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் !!

    கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி...

    ருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் !!

    ருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த...