Delhi's Nitish Rana play a shot on the last day of Ranji trophy match against Bengal at Feroze Shah Kotla stadium in New Delhi on oct 25th 2015. Express photo by Ravi Kanojia.

 ரஞ்சி தொடர்; டெல்லி அணியை வழிநடத்தும் நிதிஷ் ராணா

ரஞ்சி கோப்பை தொடருக்கான டில்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சீனியர் வீரர் காம்பிர் விலகினார். இவருக்கு பதிலாக நிதிஷ் ராணா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடராக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விளங்குகின்றது. 

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் நடத்தப்படும் முதல் தர தொடரான 85வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. வரும் 12ல் டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் துவங்கவுள்ள ‘பி’ பிரிவு லீக் போட்டியில் டில்லி, இமாச்சல பிரதேச அணிகள் மோதுகின்றன. 

இப்போட்டிக்கான டில்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சீனியர் வீரர் கவுதம் காம்பிர், 37, விலகினார். இவர், சமீபத்தில் முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான டில்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவர், இந்த சீசன் முழுவதும் டில்லி அணிக்காக விளையாடுவாரா எனத் தெரியவில்லை.

இதனையடுத்து டில்லி அணியின் புதிய கேப்டனாக நதிஷ் ராணா, 24, நியமிக்கப்பட்டுள்ளார். ‘மிடில்–ஆர்டர்’ பேட்ஸ்மேனான ராணா, இதுவரை 24 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளார். துணைக் கேப்டனாக ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன் துருவ் ஷோரே, 26, அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இதுவரை 21 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி தொடருக்கான டெல்லி அணி;

நிதிஷ் ராணா (கேப்டன்), துருவ் சோரே (துணை கேப்டன்), கவுதம் காம்பீர், ஹிடென் தலால், ஹிம்மட் சிங், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, குல்வந்த் கில்ஜோல்ரியா, விகாஸ் மிஸ்ரா, லலிட் யாதவ், சிம்ரஜித் சிங், வைபவ் ராவல், வருன் சூட், சர்தக் ரஞ்சன், சிவான்க் வாசிஸ்த்.



  • SHARE

    விவரம் காண

    ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

    ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

    விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

    விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

    பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

    பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...