ரஷீத் கான், பிரண்டன் மெக்கல்லம், குஜராத், ஐதராபாத், ஐபில் 10, கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கென பிரத்யேகமாக தனது மாயாஜால பந்து வீச்சில் கூடுதலாக ஒரு முறையை உருவாக்கியுள்ளேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டில் முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார். இவர் கூக்ளி பந்து வீசுவதில் வல்லவர். 6 பந்துகளையும் 6 விதமாக வீசக்கூடியவர். இதனால் அவர் மர்மமான பந்து வீச்சு முறையை கொண்டவர் என அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தனது பந்து வீச்சில் டெஸ்ட் போட்டிக்கென கூடுதலாக ஒரு பந்து வீச்சை முறையை மேம்படுத்தியுள்ளேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘வலைப்பயிற்சியில் என்னுடைய சிறந்த பந்து வீச்சை கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதை கொண்டு வர மாட்டேன். அந்த மாதிரி பந்து வீச்சை டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்துவேன்.

புதியவகை பந்துவீச்சை அறிமுகப்படுத்திய ரஷிட் கான்: ஆனால் ஒரு கண்டிசன்! 1
Afghanistan’s Rashid Khan (C) celebrates with Afghanistan’s Najibullah Zadran (L) after taking the wicket of Pakistan’s captain Sarfaraz Ahmed for 13 during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)

டெஸ்ட் போட்டி எனக்கு கூடுதல் வாய்ப்பை கொடுக்கும். ஏனென்றால் டெஸ்டில் அதிகமான ஓவர்கள் வீச முடியும். மேலும் அதிகப்படியான நெருக்கடி கிடையாது. ஒரு மோசமான பந்தை வீசினால், அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் டி20 போட்டியில் அந்த பந்து முடிவை மாற்றிவிடும்’’ என்றார்.

இந்நிலையில்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.

புதியவகை பந்துவீச்சை அறிமுகப்படுத்திய ரஷிட் கான்: ஆனால் ஒரு கண்டிசன்! 2
EAST LONDON, SOUTH AFRICA – FEBRUARY 12: Lungi Ngidi and Dwaine Pretorius of South Africa celebrate dismissing Ben Stokes of England during the First T20 International match between South Africa and England at Buffalo Park on February 12, 2020 in East London, South Africa. (Photo by Dan Mullan/Getty Images)

தொடக்க வீரர் பவுமா 27 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் குயின்டன் டி காக் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 26 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். ஜோர்டன் 2 விக்கெட்டும், மொய்ன் அலி, சாம் கரண், மார்க்வுட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

178 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது.

அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றிபெற்றது.வ் • SHARE

  விவரம் காண

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

  உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

  உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

  இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

  வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

  தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...