இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 118 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டர்பனில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் ஹசீம் ஆம்லா (23), டி.காக் (20), டூமினி (25), ஜோண்டோ (25), மோரிஸ் (14) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 32.2 ஓவரில் 118 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.
இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய சாஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையு, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரண்டாவது போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். பாருங்கள்:
India has been amazing in both the ODI s and the wristies have been amazing, great effort to go 2-0 up and fingers crossed for 6-0. Well done imVkohli , @yuzi_chahal and @imkuldeep18 ?????#INDvSA
— Ashwin ?? (@ashwinravi99) February 4, 2018