சந்தேகமே வேண்டாம்... இந்த பையனுக்கு கண்டிப்பா இந்திய அணியில் இடம் கிடைக்கும்; ரவி சாஸ்திரி உறுதி !! 1

நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி வரும் உம்ரன் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியிலும் இடம் கிடைக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த மற்றும் முன்னேறிய அணிகளை தவிர மற்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக மிக கடுமையாக போராடி வருகின்றன.

சந்தேகமே வேண்டாம்... இந்த பையனுக்கு கண்டிப்பா இந்திய அணியில் இடம் கிடைக்கும்; ரவி சாஸ்திரி உறுதி !! 2

நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில், சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் பலரே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக உம்ரன் மாலிக், மொஹ்சின் கான், சிம்ரஜித் சிங், முகேஷ் சவுத்ரி, திலக் வர்மா போன்ற வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது பங்களிப்பை மிக சிறப்பாக செய்து கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் பெற்று வரும் இளம் வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, உம்ரன் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியிலும் இடம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சந்தேகமே வேண்டாம்... இந்த பையனுக்கு கண்டிப்பா இந்திய அணியில் இடம் கிடைக்கும்; ரவி சாஸ்திரி உறுதி !! 3

உம்ரன் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ நேரடியாக பிரதான வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டும். உம்ரான் மாலிக்கை தனியாகவிடாமல் அவரை அனைத்துப் போட்டிகளிலும் களமிறக்க வேண்டும். முக்கிய வீரர்களான பும்ரா, ஷமி ஆகியோருடன் சேர்ந்து பந்துவீசச் செய்தால்தான் அதிகமான விஷயங்களை உம்ரான் கற்றுக்கொள்வார். அணியில் சிறந்த பயிற்சியாளர்கள், ஊழியர்கள் இருப்பதால், உம்ரான் மாலிக்கிற்கு உதவுவார்கள். எப்போதுமே மூத்த வீரர்களுடன் சேர்ந்து உம்ரானை பயன்படுத்த வேண்டும். உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து புதிய வீரர் களத்துக்குள் வரும்போது அவரின் பந்துவீச்சு சவாலாக இருக்கும். அதற்கு காரணம் உம்ரான் வேகம்தான்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *