அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!! 1
BRISBANE, AUSTRALIA - NOVEMBER 21: Ravi Shastri, Head Coach of India, looks on during game one of the the International Twenty20 series between Australia and India at The Gabba on November 21, 2018 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று கடும் கோரிக்கைகள் எழும்பி வருகின்றன.

கங்குலி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் புறக்கணிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க கவாஸ்கர் போன்றோர் நிதானப்போக்கைக் கடைபிடிக்க வலியுறுத்தினர்.

மேலும், தற்போது பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்றம் பிசிசிஐக்காக நியமித்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் சிறப்பு பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் மிரர் நவ் பத்திரிகைக்கு ரவிசாஸ்திரி அளித்த பேட்டி:

அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!! 2

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பிசிசிஐ மற்றும் அரசு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவோம். என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள்.

மிகவும் உணர்வுபூர்வமான விவகாரம் ஆகவே உலகக்கோப்பைப் போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டாம் என்று அரசு முடிவெடுத்தால் அரசின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்.

இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது எனவும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!! 3

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் நிர்வாக கமிட்டியின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகிய அமைச்சகங்களின் கருத்துகள் கேட்கப்படும். அத்துடன் பிசிசிஐ நிர்வாகம் பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து முடிவை எடுக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கோப்பையின் ரவுண்டு ராபின் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 ஆம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உலகக் கோப்பை தொடரின் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கிரிக்இன்போவிற்கு அளித்த பேட்டியில், “இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!! 4

அந்த ஸ்டேடியத்தின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 25000 தான். ஆனால் எங்களுக்கு இதுவரை இந்தப் போட்டியை காண 4லட்சத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளது. இது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான போட்டியை காண விருப்பம் தெரிவித்தவர்களை விட அதிகமான ஒன்று. மேலும் இவை அனைத்தும் உள்ளூர் ரசிகர்களின் விண்ணப்ப அளவுதான். இதற்கு அடுத்து உலக ரசிகர்களின் விண்ணப்பங்களும் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *