சுரேஷ் ரெய்னா இல்லாதது தான் சென்னை அணியின் படுதோல்விகளுக்கு காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

சென்னை அணிக்காக விசுவாசமாக இருந்த சுரேஷ் ரெய்னாவை கழட்டி விட்டது தான் சென்னை அணி செய்த மிகப்பெரிய தவறு என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணிகளுள் ஒன்றாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, நடப்பு தொடர் மிக மோசமானதாக அமைந்தது. கடந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை அசால்டாக தட்டி தூக்கியிருந்த சென்னை அணி, இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே மிக மோசமாக விளையாடியது.

தீபக் சாஹர், ஆடம் மில்னே போன்ற முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு காயம், கேப்டன்சியில் ஏற்பட்ட குழப்பம் போன்ற பின்னடைவுகளால், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற சென்னை அணி, 10 போட்டிகளில் படுதோல்வியடைந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

சுரேஷ் ரெய்னா இல்லாதது தான் சென்னை அணியின் படுதோல்விகளுக்கு காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் சென்னை அணி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசுவாசமாக இருந்த சுரேஷ் ரெய்னாவை தேவையில்லாமல் நீக்கியது தான் தோல்விக்கு காரணம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா இல்லாதது தான் சென்னை அணியின் படுதோல்விகளுக்கு காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த வருடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விசுவாசமாக இருந்த சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி மறந்து விட்டது, ரெய்னா ஐபிஎல் தொடரில் ஏற்கனவே தன்னை நிரூபித்து விட்டார்.மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து எப்பொழுதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னாவை சென்னை அணி தேர்ந்தெடுத்திருக்கலாம், அவர் இருந்திருந்தால் மற்ற பேட்ஸ்மேன்கள் உடன் இணைந்து சென்னை அணியின் வேலையை எளிதாக்கி இருப்பார். அம்பத்தி ராயுடு உத்தப்பா போன்ற வீரர்கள் இன்னும் சென்னை அணியில் விளையாடுகிறார்கள், ரெய்னாவும் சென்னை அணியில் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்” என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.