வீடியோ; போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திர அஸ்வின் !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் போட்டு நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

வீடியோ; போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திர அஸ்வின் !! 2

இந்த தொடரின் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் 25ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.

வீடியோ; போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திர அஸ்வின் !! 3

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 296 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வீடியோ; போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திர அஸ்வின் !! 4

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதனால் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 14 ரன்கள் எடுத்துள்ளது.

வீடியோ; போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திர அஸ்வின் !! 5

இந்தநிலையில், இந்த போட்டியின் போது இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் தனது பந்துவீச்சில் நிறைய விசயங்களை மாற்றி விக்கெட் எடுக்க முயற்சித்த ரவிச்சந்திர அஸ்வின், பந்துவீசும்போது ஸ்டம்ப்பை ஒட்டிச்சென்று ஓடி பந்துவீசினார். அவர் பிட்ச்சின் டேஞ்சர் ஏரியாவில் ஓடவில்லை என்றாலும், அவர் அம்பயருக்கு நேராக சென்று பந்துவீசியதால், அம்பயரால் சரியாக பார்க்கமுடியவில்லை.

வீடியோ; போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திர அஸ்வின் !! 6

இதையடுத்து ஸ்டம்ப்புக்கு நேராக சென்று பந்துவீசாமல் ஓரமாக சென்று வீசுமாறு அம்பயர் நிதின் மேனன் வலியுறுத்த, இதனால் டென்ஷனான அஸ்வின் போட்டி நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *