வம்பிழுக்க நினைத்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் மூக்குடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தார்.

இந்தியா பக்கம் வாங்க தம்பி வச்சுக்கிறேன்; ஆஸ்திரேலிய கேப்டனை கெத்தாக மிரட்டிய அஸ்வின் !! 2

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் அரைசதம் அடித்து கை கொடுத்தனர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் 81 ரன்களும், கேமிரான் க்ரீன் 84 ரன்களும் லபுசேன் 73 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் 312 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி கெத்தாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்தியா பக்கம் வாங்க தம்பி வச்சுக்கிறேன்; ஆஸ்திரேலிய கேப்டனை கெத்தாக மிரட்டிய அஸ்வின் !! 3

இதன்மூலம் 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி நான்காம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்திருந்தது.

போட்டியின் கடைசி நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் ரஹானே விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த புஜாரா – ரிஷப் பண்ட் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது.

இதில் புஜாரா தனது வழக்கமான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், மறுமுனையில் ரிஷப் பண்ட்டோ அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை போன்று அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடிய புஜாராவும் 77 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இந்தியா பக்கம் வாங்க தம்பி வச்சுக்கிறேன்; ஆஸ்திரேலிய கேப்டனை கெத்தாக மிரட்டிய அஸ்வின் !! 4

இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழந்து வெளியேறியதால், போட்டியின் தன்மை உணர்ந்து சுதாகரித்து கொண்ட அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி , போட்டியை டிரா செய்யும் முனைப்பில் விக்கெட்டை இழந்துவிடாமல் தடுப்பாட்டம் ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அஷ்வினும் விக்கெட்டை இழந்துவிடாமல் தடுப்பாட்டம் ஆடினார். இந்த ஜோடியை பிரித்தால் தான் வெற்றி வாய்ப்பு என்பதால், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், நேதன் லயன் ஆகிய ஆஸி., பவுலர்கள் எவ்வளவோ கடுமையாக போராடினர். ஆனால் ஹனுமா விஹாரியும் அஷ்வினும் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை. இதனால் இரு அணிகள் இடையேயான நான்காவது போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஒரு கட்டத்தில் விக்கெட்டை இழந்ததால், மீண்டும் வெற்றி நம்பிக்கையை பெற்ற ஆஸ்திரேலிய அணி ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வினின் விக்கெட்டை கைப்பற்றிவிட்டால் போது ஈஷியாக வெற்றி பெற்றுவிடலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்பரித்தனர். ஆனால் களமிறங்கிய ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வினோ மிகவும் நிதானமாக விளையாடியது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. இதனை டிம் பெய்ன் போன்ற வீரர்கள் வார்த்தைகளால்யே வெளிப்படுத்தினர். குறிப்பாக அஸ்வின் பேட்டிங் செய்யும் போது அவரை தொடர்ந்து சீண்டி கொண்டே இருந்தார்.

இந்தியா பக்கம் வாங்க தம்பி வச்சுக்கிறேன்; ஆஸ்திரேலிய கேப்டனை கெத்தாக மிரட்டிய அஸ்வின் !! 5

அஷ்வினை சீண்டியது மட்டுமல்லாது, ஏதாவது பேசிக்கொண்டே இருந்தார். அது ஆஸி., வீரர்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். அந்தளவிற்கு ஏதாவது பேசிக்கொண்டே இருந்தார் டிம் பெய்ன். அஷ்வினை சீண்டிக்கொண்டே இருக்க, நான் எவ்வளவுதான் டீசண்ட்டாக நடந்துகொள்ள முடியும் என்று பெய்னிடம் கேட்டேவிட்டார் அஷ்வின்.

ஆனாலும் தொடர்ந்து, அஷ்வினை விடாத பெய்ன், “உன்னை(அஷ்வினை) பிரிஸ்பேனில் சந்திக்க காத்திருக்கிறேன்” என்றார். அதற்கு பதிலளித்த அஷ்வின், “நானும் உனது இந்திய வருகைக்காக காத்திருக்கிறேன்” என்று பதிலடி கொடுத்தார்.

அதற்கு பதிலாக கெட்ட வார்த்தையுடன், “குறைந்தபட்சம் என்னை எனது அணி வீரர்களுக்காவது பிடிக்கும். ஆனால் உன்னை உன் அணி வீரர்களுக்கே பிடிக்காது அல்லவா?” என்றார் பெய்ன்.

அஷ்வின், “உன்(பெய்ன்) பேச்சை நிறுத்து; நான் ஆடுகிறேன்” என்று சொல்லிவிட்டார். டிம் பெய்ன் தொடர்ந்து பிதற்றிக்கொண்டிருக்க, அஷ்வின் பேட் செய்யாமல் நிற்க, பவுலர் நேதன் லயன் காத்துக்கொண்டிருந்தார்.

“உன் ஆள்தான் காத்துக்கிட்டு இருக்கான்” என்று லயன் காத்துக்கொண்டிருப்பதை டிம் பெய்னிடம் நினைவூட்டினார் அஷ்வின். ஆனாலும் திருந்தாத பெய்ன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

ஸ்லெட்ஜிங் உத்தியும் எடுபடவில்லை; போதாதற்கு மூக்குடைபட்டதுதான் மிச்சம். ஆனால் விடாமல் பிதற்றிக்கொண்டே இருந்தார் டிம் பெய்ன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *