சச்சின் மற்றும் கபில்தேவ் சாதனையில் இணைய உள்ள ரவீந்திர ஜடேஜா 1

சச்சின் மட்டும் கபில்தேவ் சாதனையில் இணைய உள்ள ரவீந்திர ஜடேஜா

ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இணைய உள்ளார். இன்னும் 10 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அவர் உலக அளவில் 26 ஆவது வீரராக இந்த சாதனையை செய்வார்..

இதற்கு முன்னதாக இந்தியாவின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில்தேவ் ஆகிய இருவர் மட்டுமே 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது அவர் 10 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அந்த சாதனை பட்டியலில் இணைவார்.

 

சச்சின் மற்றும் கபில்தேவ் சாதனையில் இணைய உள்ள ரவீந்திர ஜடேஜா 2

 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸி. அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்கை தேர்வு செய்தது. அலெக்ஸ் கரே, கேப்டன் ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 அணியின் ஸ்கோரை உயர்த்தி சரிவில் இருந்து மீட்ட ஷான் மார்ஷ் 3 சிக்ஸர், 11 பவுண்டரியோடு 123 பந்துகளில் 131 ரன்களை சேர்த்து புவனேஸ்வர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜாய் ரிச்சர்ட்ஸன் 2, நாதன் லயன் 12, பீட்டர் சிடில் 0 என சொற்ப ரன்களில் வெளியேறினர். பெர்ஹன்டர்ப் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது ஆஸி. அணி.
புவனேஸ்வர், ஷமி அபாரபந்துவீச்சு:

சச்சின் மற்றும் கபில்தேவ் சாதனையில் இணைய உள்ள ரவீந்திர ஜடேஜா 3

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 45 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். அவருக்கு துணையாக முகமது ஷமியும் 58 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டை சாய்த்தார். ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

கேப்டன் கோலி-மூத்த வீரர் தோனி இணை சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஹை ரிச்சர்ட்ஸன் பந்தில் அவுட்டானார். சச்சின் மற்றும் கபில்தேவ் சாதனையில் இணைய உள்ள ரவீந்திர ஜடேஜா 4
தோனி 2 சிக்ஸருடன் 54 பந்துகளில் 55 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 25 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. 4 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது. கடைசி ஆட்டம் மெல்போர்னில் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆட்ட நாயகன் கோலி: அபாரமாக ஆடி 104 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *