தற்போது பெங்களுருவில் அடுத்த ஐபில் சீசனுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. தமிழக அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடி கொடுத்து வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
2017ஆம் ஆண்டு ஐபில் தொடருக்காக முருகன் அஸ்வினை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி வாங்கியது. அந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய அவர் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன் பிறகு அவர் உள்ளூர் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல் பட்டார்.
உள்ளூர் டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம், சதம் மற்றும் தேவையான சமயத்தில் விக்கெட் எடுத்தார். 2018ஆம் ஆண்டு ஐபில் தொடருக்கான ஏலத்தில் அவரை வாங்க கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் 3.2 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.