மெக்கல்லம், வோக்சை வெளியேவிட்டது பெங்களூர்! 1
பெங்களூர் அணி வெளியிட்ட மற்றும் தக்க வைத்த வீரர்கள் பட்டியல்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராத் கோஹ்லி (இ), முகமது சிராஜ், நவ்தீப் சைனி,குல்வன்ட் கெஜ்ரோலியா, பார்திவ் படேல், பவன் நேகி, உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஜவேந்திர சாஹல், ஏபி டி வில்லியர்ஸ், கொலின் டி கிராந்தோம், மொயின் அலி, டிம் சவுத்தி, நாதன் கோல்ட்டர் நைல்

வெளியே விட்டது: பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், கோரே ஆண்டர்சன், சர்ஃபராஸ் கான், முருகன் அஸ்வின், மனன் வோரா, அனிகேட் சௌத்ரி, அனிருதா ஜோஷி, பவன் தேசப்பன்டே

வர்த்தகம் : மன்டிப் சிங்கிற்கு மார்கஸ் ஸ்டொனிஸ்

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடரையொட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு, கடந்த சீசனில் மோசமாக விளையாடிய வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது.மெக்கல்லம், வோக்சை வெளியேவிட்டது பெங்களூர்! 2

அதன்படி யுவராஜ் சிங், ஆஸ்திரேலியாவின் தற்போதைய கேப்டன் ஆரோன் பிஞ்ச் உள்ளிட்ட பலருக்கு கல்தா கொடுத்துள்ளது அந்த அணி நிர்வாகம்.

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான சிறிய அளவிலான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கு ஐபிஎல் அணிகள் சரிவர விளையாடாத வீரர்களைக் கழற்றிவிட்டும் புதிய வீரர்களைத் தேர்வு செய்யவும், பரிமாறிக்கொள்ளவும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் நேற்று சிஎஸ்கே அணி உள்நாட்டு வீரர்கள் இருவரையும், இங்கிலாந்தின் மார்க் வுட்டையும் கழற்றிவிட்டது.

இந்நிலையில், அதிரடி நடவடிக்கையாக தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினை தலைமையாகக் கொண்ட கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பல வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது. பல முக்கிய வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அந்த வகையில், கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங் வெறும் 65 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மிகவும் ஆவேசமாக விளையாடக்கூடிய ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 10 போட்டிகளில் விளையாடி 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மற்றொரு வீரர் அக்சர் படேல் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆதலால், இந்த 3 வீரர்களையும் கழற்றிவிட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.மெக்கல்லம், வோக்சை வெளியேவிட்டது பெங்களூர்! 3

கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் 9 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளதாகவும், குறிப்பாக கெயில், கே.எல்.ராகுல், விக்கெட் வீழ்த்தும் திறன்கொண்ட ஆன்ட்ரூ டை, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரையும் தக்கவைத்துள்ளது.

இது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில், ”முக்கியமான வீரர்களைத் தக்கவைத்துள்ளோம். அணியில் அனைத்துத் துறைகளிலும் சிறந்தவர்களைத் தேர்வு செய்ய முயற்சிகள் செய்யப்படும். ஏலத்தில் அதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம்:

ஆர்.அஸ்வின், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், ஆன்ட்ரூ டை, முஜிப் உர் ரஹ்மான், அங்கீத் ராஜ்பூத், கிறிஸ் கெயில், டேவிட் மில்லர்

கழற்றிவிடப்பட்ட வீரர்கள்

யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, பரிந்தர் சிங், அக்ஸதீப் நாத், பிரதீப் சாஹு, மயங்க் தாகர், மன்சூர்.

மாற்றப்பட்ட வீரர்

மன்தீப் சிங்குக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *