2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

 இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜேமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். 

ஆர்சிபி தேர்வு செய்த வீரர்களின் நிலைமையை பார்த்தா சிரிப்பு வருது ; ஓரிரு ரன்னில் விக்கெட் இழந்து பரிதாபம் ! 2

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 8 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு தேர்வு செய்திருக்கிறது. பெங்களூர் அணி தேர்வு செய்த வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல், கெயில் ஜேமிசன் டேனியல் கிறிஸ்டெய்ன், ஜோஸ் பிளிப், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தற்போது மோசமான நிலையில் இருப்பதற்கான சான்று கிடைக்கிறது.

ஆர்சிபி தேர்வு செய்த வீரர்களின் நிலைமையை பார்த்தா சிரிப்பு வருது ; ஓரிரு ரன்னில் விக்கெட் இழந்து பரிதாபம் ! 3

அது என்னவென்றால் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இவர்கள் அனைவரும் ஓரிலக்கு ரன்களில் விக்கெட்டை இழந்து இருக்கின்றனர். அந்த போட்டியில் 14.5 கோடி தேர்வு செய்யப்பட்ட மேக்ஸ்வெல் 1  ரன் மட்டும் எடுத்து  விக்கெட் இழந்து இருக்கிறார். ஆர்சியில் தேர்வு செய்யப்பட்ட மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஸ் பிளிப் 2 ரன்களும், கேன் ரிச்சர்ட்ஸன் 5 ரன்களும் எடுத்து விக்கெட் இழந்து இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து 15 கோடிக்கு எடுக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 3 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த ரசிகர்கள் ஆர்சிபி அணியின் தற்போது நிலைமையை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்சிபி தேர்வு செய்த வீரர்களின் நிலைமையை பார்த்தா சிரிப்பு வருது ; ஓரிரு ரன்னில் விக்கெட் இழந்து பரிதாபம் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *