லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேல் மான்கடிங் செய்திருந்தால் கம்பீர்-விராட் கோலி இடையே மைதானத்திற்குள் கடும் சண்டை நேர்ந்திருக்க கூடும் என்று பேட்டி அளித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய லீக் போட்டி பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாதவாறு நடந்து முடிந்திருக்கிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது.
அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ஸ்டாய்னிஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் மிரட்டல் அடி கொடுத்து லக்னோ அணி இலக்கை அடைய முக்கிய பங்காற்றினர்.
கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர் கடைசி பந்தில் லக்னோ அணி ஸ்கொரை சமன் செய்தது, வெற்றிபெற 1 ரன் மட்டுமே தேவை என இருந்தது. மேலும் ஒன்பது விக்கெட்டுகளையும் இழந்து இருந்தது.
ஆர்சிபி அணி விக்கெட் எடுத்தால் போட்டியை சமன் செய்யலாம், ஒரு ரன் எடுத்தால் லக்னோ வெற்றி பெற்றுவிடலாம் என்று இருந்தபோது, ஹர்ஷல் பட்ட பந்துவீச ஓடிவருகையில் ரவி பிஸ்னாய் களத்தைவிட்டு வெளியே ஓடியதால் மான்கடிங் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.
அதற்கு அடுத்த பந்திலும் மான்கடிங் செய்திருக்கலாம். ஆனால் ஹர்ஷல் பட்டேல் செய்யவில்லை. பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முடியவில்லை. தூக்கி வீசிய நேரத்திற்குள் 1 ரன் ஓடி வெற்றி பெற்றுவிட்டனர்.
பவுலிங் பக்கம் நின்று கொண்டிருந்த லக்னோ வீரர் பந்துவீசுவதற்குள் கிட்டத்தட்ட இரண்டு மூன்று அடிகள் ஓடிவிட்டார். இது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் அட்வான்டேஜ் ஆக இருக்கிறது. இதற்காகத்தான் மான்கடிங் செய்கிறார்கள். இந்த விஷயத்தை விமர்சிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என்று சிலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஹர்ஷல் பட்டேல் மான்கடிங் செய்திருந்தால் மைதானத்திற்குள் என்னென்ன பரபரப்பு நேர்ந்து இருக்கும் என்பதை பற்றி பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன். அவர் பேசியதாவது:
ஹர்ஷல் பட்டேல் ரன் அவுட் செய்ய வேண்டும் என்று என்பதற்காகவே ஓடி வரவில்லை. ஓடிவரும் பொழுது கிட்டத்தட்ட இரண்டு மூன்று அடிகள் ரவி பிஷ்னாய் முன்னே ஓடிக் கொண்டிருந்தால், பவுலர்களுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று பார்த்தவுடன் தோன்றும். அதைத்தான் ஹர்ஷல் பட்டேல் செய்திருந்தார். ஒருவேளை மான்கடிங் செய்திருந்தால், ஆத்திரமாக காணப்பட்ட கௌதம் கம்பீர் உள்ளே ஓடி வந்திருப்பார். களத்திற்குள் இருந்த விராட் கோலி தனது பங்கிற்கு ஆக்ரோசமாக சென்றிருப்பார். இருவருக்கும் இடையே கைகலப்பு நேர்ந்திருக்கலாம்.
இரண்டாவது முறையும் ரவி பிஸ்னாய் அதே போன்று பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு ஓடிக்கொண்டிருந்தார். அவர் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் இது எப்படி முறையானதாக இருக்கும்? பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னர் அவ்வளவு தூரம் முன்னே ஓடினால் பவுலிங் செய்யும் அணி எவ்வாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்? மான்கடிங் தவறு என்று சொல்வது நியாயமற்றது. விதிமுறையும் உள்ளது.” என்றார்.