மீண்டு வந்து பந்துவீச்சில் அசத்திய பும்ராஹ்... கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது பெங்களூரு!! 1
Mitchell McCleneghan of the Mumbai Indians and Ben Cutting of the Mumbai Indians celebrates the wicket of Chris Gayle of the Kings XI Punjab during match fifty of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Mumbai Indians and the Kings XI Punjab held at the Wankhede Stadium in Mumbai on the 16th May 2018. Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI

போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் துவக்க வீரர்கள் டி காக் மற்றும் ரோஹித் இருவரும் நிதான துவக்கத்தை கொடுத்தனர்.இதில் டி காக் 20 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மீண்டு வந்து பந்துவீச்சில் அசத்திய பும்ராஹ்... கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது பெங்களூரு!! 2

பின்னர் சூரியகுமாருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ரோஹித் அணிக்கு ரன்கள் சேர்த்தார். துரதிஷ்ட வசமாக, 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார் ரோஹித்  சர்மா. பின்னர் சூரியகுமார் யாதவும் 38 ரன்களுக்கு வெளியேற மும்பை அணி பின்னடைவை சந்தித்தது.

யுவராஜ் சிங் அடுத்தடுத்து 3 சிக்ஸர்கள் விளாசினாலும், 4வது சிக்ஸ் அடிக்க முயற்சித்து வெளியேறினார்.

அதிரடியாக ஆடுவார்கள் என எதிர்பார்த்த பொல்லார்ட் மற்றும் க்ருனால் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற தடுமாறியது மும்பை அணி.

மீண்டு வந்து பந்துவீச்சில் அசத்திய பும்ராஹ்... கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது பெங்களூரு!! 3

ஆனால், விட்டுக்கொடுக்காத பாண்டியா கடைசி ஓவர் வரை அதிரடியாக ஆடி 160 ரன்களுக்கு சுருளும் என எதிர்பார்க்கப்பட்டதை 187 வரை எடுத்து சென்றார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக, சஹால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, பார்திவ் படேல் சிறப்பாக ஆடினாலும் மார்கண்டே பந்தில் போல்ட் ஆனார். பின்னர் மொயின் அலி 13 ரன்களை எடுத்து வெளியேறினார். விராத் கோஹ்லி 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் டி வில்லியர்ஸ் அதிரடியை தொடர்ந்து அரைசதம் கண்டார்.

மீண்டு வந்து பந்துவீச்சில் அசத்திய பும்ராஹ்... கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது பெங்களூரு!! 4

இவருக்கு பக்கபலமாக எவரும் இல்லை என்றாலும் சளைக்கவில்லை.

கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இருந்த நிலையில் பெங்களூரு அணி 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ட்விட்டர் ரியாக்ஷன்:

https://twitter.com/TweetHer_/status/1111332300900524032

https://twitter.com/Ladki_Anjani_Si/status/1111332711942152192

https://twitter.com/Sudharsan_ak/status/1111332703494782978

https://twitter.com/Sudharsan_ak/status/1111332703494782978

https://twitter.com/iplnews20/status/1111332701141942273

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *